English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
L.s.d.
n. பவுன்-ஷில்லிங்-பென்னி, ஆங்கில நாணயப் படி வரிசை, பணம், செல்வம்.
La
n. (இசை.) மேற்பாலையில் ஆறாவது இசைமானம் அல்லது பண்.
Laager
n. படைவீடு, வண்டிகளை வட்டமாக நிறுத்தி வைத்து அமைத்த கூடாரம், படைத்துறைக்கவச ஊர்திகளின் தங்கலிடம், (வினை) வண்டிகளை வட்டமாக நிறுத்து வைத்துக் கூடாரம் அமை, வண்டி வட்டக்கூடாரங்களில் ஆட்களைத் தங்கவை.
Labarum
n. ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி.
Labefaction
n. நடுக்கம், தளர்ச்சி, வலுக்குறைவு, வீழ்ச்சி.
Label, n..
தாள் நறுக்கு, முகப்புவரிச்சீட்டு, பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு, வகை விவரத்துணுக்கு, தற்குறிப்பு அடை மொழிப்பெயர், ஒட்டுப்பொறிப்புத்தலை, தலைச்சின்னம், (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை, தலைச்சின்னத்தை ஒட்டு, இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு.
Labia
n. pl. (ல.) (உள்.) இதழ்கள் போன்ற பெண்குறியின் பகுதிகள்.
Labial
n. இதழ் ஒலி, உதடுகளின் துணையால் ஒலிக்கப்படும் எழுத்து, (பெ.) இதர்பற்றிய, இதழ்போன்ற, உதடுகள் போன்று செயலாற்றுகிற, உதடுகளால் ஒலிக்கப்பெறுகிற.
Labiate
n. (தாவ.) உதடனைய இதழ்களுடைய மலர்வகை, உதடு போன்ற இருபிரிவாகப் பிரிந்த புற இதழ்வட்டமுடைய செடிவகை, (பெ.) உதடனைய இதழ்களுடைய, உதடு போன்றபுல்லிவட்டங் கொண்ட, இதழ்கள் போன்ற.
Labile
a. (இயற்., வேதி.) நிலையற்ற, நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய.
Labio-dental
a. உதடும் பல்லும் பொருந்தி உண்டாகிற.
Labium
n. (ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம், ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி, உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி.
Laboratory
ஆய்வகம், ஆய்வுக்கூடம்
Laboratory
n. ஆய்வுக் கூடம், ஆராய்ச்சி செய்முறைச் சாலை.
Laborious
a. விடாதுழைக்கிற, கடினமான வேலை செய்கிற, உழைப்பாளியான, முனைத்த உழைப்பீடுபாடுடைய, மட்ட மீறிய கடுமையுடைய, வருந்தி உழைக்கத்தக்க, எளிதாகச்செய்ய முடியாத, நீடித்த உழைப்பு தேவைப்படுகிற.
Labour
-1 n. உழைப்பு, கடுமுயற்சி, சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை, முயற்சியாற்றல், உழைப்பாற்றல், தொழிலாளர் தொகுதி, தொழில் வகுப்பு, தொழிலாளர் இன ஆற்றல், ஆற்றல் சான்ற முயற்சி, மூளை வேலை, பிள்ளைப் பேற்றுவலி, கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு,
Labour
-2 n. அரசியல் முறையின் தொழிலாளர் தொகுதி.
Labourer
n. உழைப்பவர், தொழிலாளி, பாட்டாளி.
Labourite
n. தொழிற்கட்சி உறுப்பினர், தொழிற்கட்சிச் சார்பாளர்.
Labour-market
n. தேவைக்கேற்பத் தொழிலாளர் கிடைக்கத் தகுந் சமுதாய நிலைக்களம்.