English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lamasery
n. திபேத்திய மங்கோலிய புத்தசமயத் துறவிகளின் மடம்.
Lamb
n. இளமறி, செம்மறியாட்டுக்குட்டி, செம்மறியாட்டுக்குட்டி இறைச்சி, திருக்கோயிற் குழுவினரில் இளையர், சூதுவாதற்றவர், வலுவற்றவர், அன்புக்குரியவர், (வினை) செம்மறியாட்டுக் குட்டிகளை ஈன, பெறு, குட்டிபோடு, குட்டி போடும் பெண் ஆடுகளைப்பேணு.
Lambaste
v. நையப்புடை, அடித்துத்தண்டனை செய், அடி.
Lambda
n. கிரேக்க நெடுங்கணக்கில் 'எல்' என்ற எழுத்து.
Lambdacism
n. ரகரத்தை லகரம்போல ஒலித்தல், லகரத்தைத் தவறாக ஒலித்தல், லகர ஔதயுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல்.
Lambdoid, lambdoidal
a. கிரேக்க 'எல்' எழுத்தின் வடிவுடைய.
Lambeint
a. எரிதழல் வகையில் தடவிச்சென்றெரிகின்ற, ஔதவகையில் தழவாடுகின்ற, சுடரிடுகின்ற, மெல்லொளி வீசுகின்ற, பேச்சு வகையில் நகையொளி வீசுகின்ற, நகைச்சுவை வகையில் கலகலப்பான.
Lambeth
n. ஆங்கிலத் திருச்சபைத் தலைமைக்குருவின் மாளிகை, திருச்சபை மண்டலத் தலைமைக்குரு.
Lamblike
a. ஆட்டுக்குட்டி போன்ற, அமைந்த மெல்லியல் புடைய.
Lambrequin
n. கதவின் அல்லது பலகணியின் முகட்டுத் திரை.
Lambs-fry
n. விதையடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் விதைப்பகுதி இறைச்சி.
Lambs-tails
n. கம்பளியோடுகூடிய ஆட்டுக்குட்டித்தோல், பதனிடப்பட்ட ஆட்டுக்குட்டித்தோல்.
Lambs-wool, n.,
காலுறை செய்தற்குப் பயன்படும் ஆட்டுக்குட்டியின் கம்பளி.
Lame
a. நொண்டியான, நொண்டுகிற, காலொடிந்த, காலற்ற, முடமான, கதை முதலியவற்றின் வகையில் குறைபாடுடைய, வாத வகையில் குற்றமுள்ள, காரண விளக்க வகையில் மனநிறைவளிக்காத, சாக்குபோக்கு வகையில் ஒப்புக்கொள்ளத்தக்க, சீர் வகையில் அசைக்குறை வான, தட்டித்தடங்குகிற, (வினை) நொண்டியாக்கு, முடமாக்கு, குறைபடுத்து, ஏலாதாக்கு.
Lame
n. (பிர.) பொன் அல்லது வௌளி இழைகளாற் பின்னப்பட்ட துணி (பெ.) பொன் அல்லது வௌளி இழைகளாற் பின்னப்பட்ட.
Lamella
n. தாள்படலம், செதிளடுக்கு, தசைச்வ்வு, எலும்புத் தகடு.
Lament
n. புலம்பல், ஒப்பாரி, இரங்கற்பா, கையறுநிலைப்பாடல், (வினை) புலம்பு, அழு, நொந்து அரற்று, கழிந்ததற் கிரங்கு, வருந்து, இறந்தவருக்காகத் துயர்கொண்டாடு.
Lamentable
n. வருந்தத்தக்க, துயருக்குரிய, துக்கங் கொண்டாடுதற்குரிய.
Lamia
n. புலம்புதல், ஒப்பாரி வைத்தல், கதறுதல், ஓலமிடுதல்.
Lamina
n. குழந்தைகளையும் மனிதர்களையுங் கொன்று தின்னும் பெண்பேய் உரு.