English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Zadkiel
n. 'சட்கியல்' என்னும் புனைபெயரர் தோற்றுவித்த சோதிடப் பஞ்சாங்கம்.
Zaffer,zaffre
பீங்கானுக்குப் பயன்படுத்தப்படும் நீலச்சாய வேதிப் பொருள்.
Zai,batsu
இரண்டம் உலகப் போர்க்கால ஜப்பானின் தொழிலாட்சி ஆதிக்க இனம்.
Zambo
n. நீகிரோ-ஐரோப்பியக் கலப்பினத்தவர்.
Zany
n. கேலிக்கூத்தர், கோமாளியின் துணைவர், வீகடர், அறிவிலாக் குறிம்பர், மந்த மதியினர்.
Zanzibar,I
கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சான்ஸிபார் தீவினர்,(பெ.) சான்ஸிபார் தீவு சார்ந்த.
Zaptieh
n. துருக்கிய காவல் துறையர்.
Zarathustrian
n. பார்சி சமயத்தைப் பின்பற்றுபவர், (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த.
Zareba,zariba
ஆப்பிரிக்க சூடான் நாட்டு வழக்கில் பாசறைச் சூழடைப்பு, சூடான் வழக்கில் கிராம வேலி வளைவு.
Zax
n. கற்பலகை வெட்டுக்கத்தி.
Zeal
n. பற்றார்வக் கிளர்ச்சி, ஆர்வச் சுறுசுறுப்பு, விருப்பார்வம்.
Zealot
-1 n. உணர்ச்சி வெறியர், முனைப்பர்வலர், விடாப் பிடிக் கொள்கையர்.
Zealot
-2 n. ரோம ஆதிக்கத்தை இடைவிடாது எதிர்த்த யூத வெறியர் குழுவினர்.
Zealous
a. பற்றார்வமிக்க, ஆர்வச் சுறுசுறுப்புடைய.
Zebec,zebeck
நடுநிலக்கடலக முப்பாய்மரக் கப்பல்.
Zebra
n. வரிக்குதிரை, (பெ.) வரிக்குதிரையைப்போல் பட்டைக் கோடுகளையுடைய.
Zebra-wood
n. பட்டைக் கோடுகளையுடைய மரக்கட்டை, பட்டைக் கோட்டுக் கட்டையினையுடைய மர வகை.
Zebrine
a. வரிக்குதிரை சார்ந்த.
Zed
n. ஆங்கில நெடுங்கணக்கின் கடைசி எழுத்து.