இந்தியா, உலகின் செல்வச் செழிப்புள்ள மற்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிகவும் பண்டைய நாகரிகங்களின் தாயகம் ஆகும். இந்த நாகரிகம், சிந்து நதி பள்ளத்தாக்குப் பகுதியில் தோற்றுவாயாக அமைந்தது. எனவே அதற்குக் கொடுக்கப்பட்ட பெயர் சிந்து சமவெளி நாகரிகம் ஆகும். அதன் மக்கள் அதன் வழித்தோன்றல்களாக இன்னும் தென் இந்தியாவில் திராவிடர்கள் என்ற பெயரில் வசிப்பதாகக் கருதப்படுகிறது.
இந்திய வரலாற்றில் புவியியல் தாக்கம் ...
பொதுவாக வரலாற்றுக்கு இரு கண்கள் உண்டு எனக் கூறுவர். ஒன்று காலம். மற்றொன்று புவியியல் அமைப்பு. வரலாற்றின் போக்கை பெரும்பாலும் காலமும் இடமும் நிர்ணயிக்கின்றன என்றும் கூறலாம். குறிப்பாக ஒரு நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை அதன் புவியியல் கூறுகளே பெரிதும் நிர்ணயிக்கின்றன.