ஆரியர்களின் பூர்விகம்
ஆரியர்களின் பூர்விகம் என்பது விவாதத்துக்குரிய பொருளாகும். இதுபற்றி பல்வேறு சுருத்துக்கள் நிலவுகின்றன. பல்வேறு அறிஞர்கள் வெவ்வேறு பகுதிகளை ஆரியர்களின் பூர்வீகமாக குறிப்பிடுகின்றனர். ஆர்க்டிக் பகுதி, ஜெர்மனி, மத்திய ஆசியா, தெற்கு ரஷ்யா போன்ற பகுதிகள் அவர்களது பூர்வீகமாக கருதப்படுகின்றன. பாலகங்காதார திலகர் வானவியல் கணக்குகளை ஆதாரமாகக் கொண்டு ஆரியர்கள் ஆர்க்டிக் பகுதியிலிருந்து வந்தவர்கள் என வாதிடுகிறார். இருப்பினும் தெற்கு ரஷியப்பகுதியே ஆரியர்களின் இருப்பிடம் என்ற கருத்தே ஏற்கத்தக்கதாக உள்ளது. வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர். அங்கிருந்து ஆரியர்கள் ஆசியா, ஐரோப்பா ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கக்கூடும். கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்தோ-ஆரியர்கள் என அவர்களை அழைக்கிறோம். இந்தோ-ஆரிய மொழியான வடமொழியை அவர்கள் பேசிவந்தனர்.
வேத இலக்கியங்கள்
வேத காலம் |
பல்வேறு கடவுளைப் புகழ்ந்து இந்த பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சடங்குகளின்போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்கள் யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. சடங்கின்போது இசைப்பதற்காகவே இயற்றப்பட்டது சாம வேதம். இதிலிருந்தே இந்திய இசை தோன்றியதாகக் கருதப்படுகிறது. பல்வேறு சடங்குகள்பற்றி அதர்வ வேதம் குறிப்பிடுகிறது.
நான்கு வேதங்கள் தவிர, பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய இலக்கியங்களும் உள்ளன. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள். காட்டு இலக்கியம் எனக் கூறப்படும் ஆரண்யகங்கள் மந்திரம், வேள்வி, பலியிடுதல் போன்றவற்றை கூறுகிறது. இராமாயணத்தை வால்மீகியும், மகாபாரதத்தை வேத வியாசரும் இயற்றினர்.