- வாரம்: வாரம் என்ற சொல்லிற்கு கிழமை எனப் பொருள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு கிழமைகளே வாரம் ஆகும்.
- திதி: திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம். சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் இணைந்து இருந்தால் அமாவாசை திதி ஆகும். ஒன்றுக்கொன்று நேர் எதிராக இருந்தால் பௌர்ணமி திதி ஆகும். திதிகள் மொத்தம் 30. இவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அமாவாசை முதல் பௌர்ணமி வரையில் வளர்பிறை திதி அல்லது சுக்லபட்ச திதி. அவை மொத்தம் 14 ஆகும்.
- நட்சத்திரம்: நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தி ஏழு ஆகும். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அந்த நட்சத்திரமே அன்றைய நாளின் நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரமே அந்த நேரத்தில் பிறந்த அனைவருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஆகும். (குறிப்பு – நட்சத்திரங்களின் பெயர்கள்: அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகும்).
- யோகம்: யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்பது பொருள். வான் மண்டலத்தில் சூரியன் செல்லும் தூரத்தையும், சந்திரன் செல்லும் தூரத்தையும் கூட்டினால் யோகம் கிடைக்கும். யோகங்கள் மொத்தம் இருபத்தி ஏழு ஆகும். (குறிப்பு – யோகங்களின் பெயர்கள்: விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வ்யாகாதம், ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வ்யதீபாதம், வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுக்கிலம், பிராம்ஹம், ஐந்திரம், வைதிருதி).
- கரணம்: கரணம் என்பது திதியில் பாதி ஆகும். அதாவது ஒரு திதிக்கு இரண்டு கரணங்கள். இவை சரகரணங்கள், ஸ்திர கரணங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கரணங்கள் மொத்தம் 11 ஆகும். இதில் ஏழு கரணங்கள் சர கரணங்கள். இவை சுழற்சி முறையில் மாறி மாறி வரும். 4 கரணங்கள் ஸ்திர கரணங்கள் எனப்படும். இவை அமாவாசை ஒட்டிய நாள்களில் மட்டும் நடப்பில் இருக்கும்.
பௌர்ணமி முதல் அமாவாசை வரையில் தேய்பிறை திதி அல்லது கிருஷ்ணபட்ச திதி. அவை மொத்தம் 14.
இவற்றுடன் அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரண்டும் சேர்த்து 30 ஆகும்.
வளர்பிறை, தேய்பிறை எனப் பிரிக்கப்பட்டாலும் பெயர்களே ஒன்றுதான். பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 பெயர்களுக்கு முன்னும் வளர்பிறை தேய்பிறை என்று சேர்த்துச் சொல்லுவார்கள்.
(குறிப்பு – திதிகளின் பெயர்கள்: பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசை).
அதாவது அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தசியின் இரண்டாம் பாதி, அமாவாசை முழுவதும், மறுநாள் வரும் வளர்பிறை பிரதமையின் முதல் பாதி வரை ஸ்திர கரணங்கள் 4 நடப்பில் இருக்கும். மற்ற ஏழு கரணங்களும் பிற நாள்களில் சுழற்சி முறையில் வரிசைப்படி வரும்.
(சரகரணங்களின் பெயர்கள்: பலம், பாலவம், கௌலவம், தைதுலை, கரஜை, வணிஜை, பத்திரை. ஸ்திரகரணங்கள்: சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகும்).