இந்தியா, அரசியல் அமைப்பினைச் சார்ந்து 29 மாநிலங்களாகவும், தில்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 7 மத்திய அரசின் ஆட்சிப்பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள் என்ற சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.