இந்திய தேசிய இயக்கத்தில் 1905 ஆம் ஆண்டு தொடங்கி தீவிரவாத காலம் தொடங்கியது. தீவிரவாதிகள் அல்லது தீவிர தேசியவாதிகள் துணிச்சலான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி பெற முடியும் என்று நம்பினர். பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால் ஆகிய மூவரும் தீவிரவாத தலைவர்களில் முக்கியமானவர்கள்.
தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள்
1. 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டப்படி சட்டசபை விரிவாக்கம் தவிர வேறு எந்த குறிப்பிடத்தக்க வெற்றியையும் மிதவாதிகள் பெறத்தவறினர்.
2. 1896 - 97 ஆண்டு தோன்றிய பஞ்சத்தினாலும், பிளேக் நோயினாலும் நாடு முழுவதிலும் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாயினர்.
3. மக்களின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகியது.
4. நிறவெறி காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டனர்.
5. 1904 - 05 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஷ்ய - ஜப்பானியப் போரில் ஐரோப்பிய நாடான ரஷ்யாவை ஜப்பான் வென்றது. இதனால், ஐரோப்பிய நாடான பிரிட்டனை இந்தியர்களாலும் வெல்லமுடியும் என ஊக்கம் பிறந்தது.
6 கர்சன் பிரபுவின் பிற்போக்கான ஆட்சி தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
- அவர் கல்கத்தா மாநகராட்சி சட்டத்தை (1899) கொண்டு வந்து இந்தியரின் அதிகாரத்தை குறைத்தார்.
- பல்கலைக்கழகங்கள் சட்டம் (1904) பல்கலைக்கழக அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சித் தன்மை குறைக்கப்பட்டது. அவை அரசின் துறைகளாக மாற்றப்பட்டன.
- இராச துரோகக் குற்றச் (ஆஆஅ) சட்டம், அதிகாரிகள் ரகசிய காப்புச் சட்டம் மக்களின் உரிமைகளைப் பறித்தது.
- அவரது மோசமான நடவடிக்கை வங்கப் பிரிவினையாகும் (1905)