1600 ம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவப்பட்டது. இதற்கான அரச பட்டயத்தை இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வழங்கினார். 16-8 ம் ஆண்டு கேப்டன் ஹாக்கின்ஸ் என்பவரை வணிகக்குழு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அவைக்கு அனுப்பி சூரத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அனுமதியைக் கோரியது. முதலில் இதனை நிராகரித்தாலும், ஆங்கிலேயர் தங்களது முதலாவது வணிக நிலையத்தை சூரத்தில் நிறுவ ஜஹாங்கீர் 1613ல் ஆணை வழங்கினார். பின்னர், சர் தாமஸ் ரோ என்பவர் மேலும் பல சலுகைகளையும் உரிமைகளையும் வணிகக் குழுவிற்கு பெற்றுத் தந்தார். இதனால், ஆங்கிலேயர் ஆக்ரா, அகமதாபாத், புரோச் ஆகிய இடங்களில் தமது வாணிப மையங்களை அமைத்தனர். இவ்வாறு ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவினர் படிப்படியாக தங்களது வாணிப எல்லையை விரிவுபடுத்தி வந்தனர்.
சர் தாமஸ் ரோ |
1757 ஆம் ஆண்டு பிளாசிப் போர், 1764 ஆம் ஆண்டு பச்சார் போர் ஆகியவற்றின் விளைவாக வணிகக் குழு ஒரு அரசியல் சக்தியாக மாறியது.
1858 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்திய நிலப்பகுதிகளை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியே நடைபெற்றது. வணிகக்குழு ஆட்சியின் போது வில்லியம் கோட்டையின் முதலாவது ஆளுநராக ராபர்ட் கிளைவ் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து வெர்ல்ஸ், கார்ட்டியர் இருவரும் அப்பதவியில் இருந்தனர். பின்னர் ஹேஸ்டிங்ஸ் முதல் பலர் அப்பதவி வகித்தனர்.