வாரன் ஹோஸ்டிங்ஸ், காரன் வாலிஸ் பிரபுவைத் தொடர்ந்து சர் ஜான் ஷோர் என்பவர் 28 அக்டோபர் 1793 முதல் மார்ச் 1798 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.
இவர் வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சி காலத்தில் தலைமை வருவாய் ஆலோசகராகப் பதவி வகித்தவர் ஆவார்.
சர் ஜான் ஷோர்
இவரது ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதும் இல்லை. ஆனாலும்,
இவர் ஆட்சிக் காலத்தில் இவர் பின்பற்றிய தலையிடாக்
கொள்கையால் இந்தியாவில் அரசியல் குழப்பமே எஞ்சியது. இதனால்
ஆங்கிலேயரின் புகழ் பாதிக்கப்பட்டது. இவரது தலையிடாக் கொள்கை
பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வுகள் பெருகவும் காரணமாயிற்று. மேலும்,
நெப்போலியனின் கீழைப்படையெடுப்பு குறித்த செய்திகள் ஆங்கிலேய
ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை கொடுத்தது.
இவருக்குப் பின் வெல்லெஸ்லி பிரபு ஆட்சிக்கு வந்தார்.