வில்லியம் பென்டிங் பிரபுவைத் தொடர்ந்து ஆக்லந்து பிரபு என்பவர் 1836 முதல் 1842 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.
ஆக்லந்து பிரபு
இவரது ஆட்சிக்காலத்தில் 1836ல் வட-மேற்கு எல்லைப்புற மாகாணங்கள் நிறுவப்பட்டன. 1837ல் இந்தியா முழுவதும் அஞ்சலகங்கள் நிறுவப்பட்டன.
1837–1838ல் ஆக்ராவில் பஞ்சம் ஏற்பட்டது. 1839ல் ஏடன் நகரம் கைப்பற்றப்பட்டது. முதல் ஆப்கானியப் போர் (1836) நடைபெற்றது.
இவரது ஆப்கானியக் கொள்கை தோல்வியடையவே, பதவியிலிருந்து 1842ல் திருப்பியழைக்கப்பட்டார்.