டல்ஹவுசி பிரபுவைத் தொடர்ந்து கானிங் பிரபு என்பவர் 28 பிப்ரவரி 1856 முதல் 1 நவம்பர் 1858 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.
கானிங் பிரபு
இவர் ஆட்சிக்காலத்தில் 25 ஜூலை 1856 ல் விதவை மறுமணச் சட்டமியற்றப்பட்டது. முதல் இந்தியப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது (ஜனவரி–செப்டம்பர் 1857). 10 மே 1857 முதல் 20 ஜூன் 1858 வரை சிப்பாய்க் கலகம் நடைபெற்றது.
மேலும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் இந்தியாவில் வனிகக்குழு ஆட்சியை கலைத்துவிட்டு பின்பு 1858ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு ஆட்சி துவங்கியது.