English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pace
-1 n. ஒருகாலடி, காலடித்தொலைவு, ஏறத்தாழ முப்பது அங்குலத்தொலைவு, பண்டைரோமர் வழக்கில் ஒரே காலின் இரு தடங்களுக்கிடைப்பட்ட தொலைவு, ஏறத்தாழ அறுபது அங்குலத்தேர்வு, செல்லும் வேக அளவு, நடைவேகம், ஓட்டவேகம், முன்னேற்ற வேகம், (வினை.) மென்னடையிடு, ஒழுங்குநடைமயிடு, ஒழு
Pace
-2 prep. இசைவிணக்கம் பெற்று, கருத்துக்குப் போதிய மதிப்புப்பெற்று.
Pace tua
adv. தம் இசைவிணக்கத்துடன், தம் கருத்துக்குரிய மதிப்புடன்.
Pacer
n. மென்னடையிடுபவர், ஒழுங்குநடையிடுபவர், ஒருபக்க இருகால் ஒருங்குநடைபோடுங்குதிரை.
Pachisi
n. நால்வர் ஆடும் தாய ஆட்டம்.
Pachyderm
n. திண்தோல் விலங்கு, திண்தோலர், சொரணை கெட்டவர்.
Pachydermatous
a. திண்ல் விலங்கினஞ் சார்ந்த, திண்தோலுடைய, ஊறுணர்ச்சியற்ற.
Pacific
-1 n. ஆசிய-அமெரிக்க மாநிலங்களுக்கு இடையிலுள்ள மாகடல், பசிபிக் மாகடல், (பெ.) பசிபிக் மாகடலுக்குரிய.
Pacific
-2 a. அமைதிவாய்ந்த, சமாதானம் நாடுகிற, அமைந்த பண்புநலமுடைய.
Pacification
n. அமைதிப்படுத்துதல், அமைதி உடம்பாடு.
Pacificism, pacifism
போரொழிப்புக் கோட்பாடு, போரொழிப்பு விரும்பத்தக்க தன்றியும் நடைமுறைப்படத்தத் தக்கதென்னுங் கோட்பாடு.
Pacificist, pacifist
போரொழிப்புக் கோட்பாட்டாளர்.
Pacify
v. அமைதிப்படுத்து, கோபந் தணிவி, கொந்தளிப்பை அடக்கு, அமைதியூட்டு, அமைதி நிலவச்செய்.
Pack
n. கட்டு, சிப்பம், மூட்டைமுடிச்சு, தொகுதி, கும்பு, குழு, வேட்டைநாய்த் தொகுதி, விலங்குத்திரள், பறவைத்தொகுதி, நீர்மூழ்கு படை நிரை, சீட்டுக்கட்டுத்தொகுதி, ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு, மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி, நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி, காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி, (வினை.) திணித்துவை, நெருக்கிவை, திரட்டிக்குவி, கட்டிடு, பொதி, வரிந்துகட்டு, இறுக்கிக்கட்டு, கட்டில் இணை, மூட்டையில் வைத்துகட்டு, மூட்டையாகக் கட்டு, பெட்டியில் இட்டுநிரப்பு, பேழையிலிட்டுப் பதனஞ்செய், வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை, சீட்டுக்களைக் கட்டில் வை, (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து, நிறைய சுமை ஏற்று, மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு, ஒருங்குதிரள், தொகுதிகளாக இணை, எளிதாகக் கட்டில்அமை, அடுக்க எளிதாயமைந்திரு, முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
Package
n. கட்டு, சிப்பம், துணிமணி செறித்து வைக்கப்பட்டபெட்டி.
Pack-drill
n. தண்டமுறைப் படையணி நடை.
Packer
n. வரிந்துகட்டுபவர், வாணிக மூட்டை கட்டி.