English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pale
-1 n. வேலிக்கான கூர்முனையுடைய மரத்துண்டு, மரமுளை, கிராகுக்கம்பு, வேலி, எல்லை, (கட்.) கேடயத்தின் மையத்திலுள்ள செங்குத்தான கோடு.
Pale
-2 a. வௌதறிய, வெளுத்த, மங்கலான, மங்கல் நிறமுடைய, ஔதமழுங்கலான, (வினை.) வௌதறிப்போ, வௌதறச்செய்.
Paled
a. வேலியிடப்பட்ட, முளைகளால் வேலி சூழப்பட்ட.
Paletot
n. தளர்ச்சியான மேலங்கி.
Palette
n. ஓவியர் வண்ணத்தட்டு, ஓவியர் பயன்படுத்தும் வண்ணம், ஓவியர் வண்ண வகை, ஓவியர் வண்ணக்கலப்பு.
Palette-knife
n. வண்ண அலகுக்கத்தி, வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி.
Palfrey
n. மகளிர் ஏறிச்செல்லும் மட்டக்குதிரை.
Pali
n. புத்தசமயத்தவரது புணிதமொழி, பாளி.
Palikar
n. கிரேக்க அல்லது அல்பேனிய படைத்தளபதியின் விடுதலைப் போராட்டகாலக் குழுவின் உறுப்பினர்.
Palimpsest
n. அழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள், (பெ.) முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட.
Palindrome
n. இருவழி ஒக்குஞ்சொல். (எடு. மோரு தருமோ) முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள், மாலைமாற்று, (பெ.) இருவழியும் ஒக்குஞ் சொல்லுடைய, மாலைமாற்றான.
Palingenesis
n. புத்துயிர்ப்பு, புத்துயிரளிப்பு, புதுமலர்ச்சியூட்டல். (உயி.) முன்னோர் பண்புகள் உள்ளவாறே மாறாது உருவாதல்.
Palinode
n. மாறுபடக் கூறுங் கவிதை, கொள்கை கைதுறப்பு.
Palisade
n. கம்பிவேலி, குச்சிவேலி, கூரிய முளைகளால் ஆன அடைப்பு, (படை.) திண்ணிய கழியரண், (வினை.) வேலியிட்டு அடை, வேலி சூழ், வேலியிடு.
Palish
a. சற்றே வெளுத்துப்போன, வௌதறிய.
Pall
-1 n. பிணச்சீலை, பிணப்பேழை அல்லது கல்லறைமேல் விரிக்கப்படும் கருமை அல்லது வௌளை மென்பாட்டினாலான துணி, போப்பாண்டவர் அல்லது மாவட்டக்கிறித்தவ சமயத்தலைவர் அணியுங் கம்பளியுடை, மேலங்கி, மேலாடை.
Pall
-2 v. சுவையற்றுப்போ, ஊக்கங்குன்றச்செய், வெறுப்பூட்டு, சலிப்பூட்டு.
Palladian
a. (க-க.) பதினாறாம் நுற்றாண்டின் இத்தாலிய பாணிசார்ந்த.