English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
M,inute-book
n. கூட்ட நடவடிக்கைக்ச் சுருக்கக் குறிப்பேடு.
Ma non troppo
adv. (இசை) கட்டளைக்குறிப்பின் பின்னடைமொழி வழக்கில் மட்டாகவோ, மட்டுமீறாமல்.
Macabre
a. கொடூரமான, கோரமான.
Macaco
-1 n. அமெரிக்க குரங்கு வகை.
Macaco
-2 n. மனிதக்குரங்கு வகைகள்.
Macadam
n. பாட்டைச்சரளை, பாட்டை போடுவதற்குரிய ஒரே சீராக உடைக்கப்பட்ட கல்துணுக்குத் தொகுதி, (பெயரடை) ஜான் மக்காடம் கண்டமுறையிற் போடப்பட்ட, சரளையிடப்பட்ட.
Macadamize
v. பாட்டைக்குச் சரளைபோடு.
Macaroni
n. கோதுமைமாக் குழல்பண்ணியம், பல்கூட்டு, வண்ணப்புனைபொருள், பறவை வகை, (வர) பதினெட்டாம் நுற்றாண்டு வழக்கில் ஒய்யாரன், பிலுக்கன்.
Macaronic
a. பாடல்கள் வகையில் நையாண்டி வடிவத்திலுள்ள, மணிப்பிரவாளமான, லத்தீன் ஆங்கிலச் சொற்கதம்பமான, குழப்பமான.
Macaronics
n. pl. கேலிப்பாடல்கள், லத்தீன் ஆங்கில மொழிச்சொல் வழக்குகளின் கதம்பம், குழப்பம்.
Macaroon
n. முட்டை வெண்கரு வாதுமை சர்க்கரை முதலியன சேர்த்துச் செய்யப்படும் அப்பவகை.
Macartney
n. வான்கோழியினப் பறவை.
Macassar, macassar oil
n. கூந்தல் தைல வகை.
Maccabean
a. கிப.பி. 166-இல் சிரியாமன்னரின் கொடுங்கோன்மையிலிருந்து யூதேயாவை விடுவித்த யூத அளங்கோக்கள் சார்ந்த.
Maccoboy
n. நறுமண மூக்குத்தூள்.
Mace
-1 n. (வர) செண்டு, தண்டாயுதம், பணித்துறை முத்திரைக்கோல், மேசைப்பந்தாட்டக் கோல்.
Mace
-2 n. சாதிபத்திரி, சாதிக்காயின் மேல்தோடு.
Mace-bearer
n. பணித்துறை முத்திரைக்கோள் ஏந்திச் செல்லும் அலுவலர்.