English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fa
n. மேலை இசைமானத்தில் நான்காம் சுரம்.
Faade
n. கட்டிடத்தின் முகப்பு, முன்பக்கம், முகப்புத்தோற்றம், புறத்தோற்றம்.
Fabian
n. இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர், (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற, படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
Fable
n. கட்டுக்கதை, பழங்கதை, பழம்பாட்டி கதை, புராணக்கதைத் தொகுதி, இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு, புள்-விலங்குக்கதை, நொடிக்கதை, விளக்கக்கதை, நீதிக்கதை, கதை நிகழ்ச்சி, கற்பனைச் செய்தி, பொய், புரளி, பயனிலாப் பேச்சு, (வினை) கதை கட்டு, கட்டுக்கதை கூறு, கற்பனையான கதைகளைச் சொல், கற்பனையாகக் கூறு.
Fabled
a. பழங்கதைகளில் கூறப்பட்ட, புராணப்புகழ் பெற்ற, பழம்புகழ் வாய்ந்த.
Fabliau
n. செய்யுள் வடிவான முற்காலத்திய பிரஞ்சுப் பழங்கதை.
Fabric
n. மாளிகை, கட்டிடம், கட்டுமானம், கட்டிணைப்புப்பொருள், யாப்புறுத்தப்பட்ட ஒன்று, சட்டம், அமைப்பு, நெய்யப்பட்ட துணி வகை, நெசவுமானம், இழைமானம், நெசவு மூலப்பொருள்.
Fabricate
v. கட்டமை, கட்டியுருவாக்கு, செய், சமை, படை, உண்டுபண்ணு, புனைந்துகட்டு, பொய்யாக அமை, கள்ளக் கையொப்பமிட்டுப் பத்திரங்களை உருவாக்கு.
Fabrication
n. கட்டுதல், கட்டுமானம், செய்துருவாக்குதல், படைப்பாக்கம், கட்டுக்கதை, பொய், புனைசுருட்டு, பொய்ப்பத்திரம்.
Fabricators
கட்டமைப்பாளர்
Fabulist
n. கட்டுக்கதையாளர், நீதிக்கத இயற்றுபவர், பொய்யர்.
Fabulous
a. கட்டுக்கதை கூறுகிற, கட்டுக்கதையில் கொண்டாடப்பட்ட, பழம் புகழ் உடைய, வரலாற்றுக்கு மாறான நம்பத்தகாத, புனை சுருட்டான, அறிவுக்குப் பொருந்தாத மிகைப்படுத்தப்பட்ட.
Face
n. முகம், முகத்தோற்றம், முகமாறுபாடு, முகபாவம், பார்வை, முகப்பு, முன்புறம், முன்பகுதி, மணிப்பொறிமுகப்பு, பாறை பிளப்பு முகம், ஆட்டச்சீட்டில் படமுள்ள புறம், சுரங்கவாயில், வெட்டுவாய், வெட்டுக் கருவியின் முனை, மணிக்கல்லின் பட்டைமுகம், குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கும் பக்கம், புற அமைப்பு, புறத்தோற்றம், பரப்பு, மேற்பரப்பு, பிழம்புருவின் பக்கத்தளம், அச்சுருவின் எழுத்து வடிவப்பாணி, துணிச்சல், துடுக்குத்தனம், (வினை) முன்னிலைப்படு, எதிர்ப்படு, சந்தி, பார், எதிராக நில், தடுத்து நில், வீரத்துடன் தாங்கு, உறுதியாயிரு, திறமையுடன் நின்று சமாளி, முகம்திருப்பு, முப்ம் திரும்பு, நோக்கியிரு, நோக்கித்திருப்பு, நோக்கித்திரும்பு, நேராயிரு, எதிர்ப்புறமாயிரு, சீட்டு வகையில் முகம் மேலாகக் காட்டு, முன்னே திரையாயமை, முகப்பாயமை, மேலுறையிடு, மேற்பூச்சிடு, பரப்புமீது ஒப்பனை செய், விளிம்புசித்தரி, விளிம்பு இணை.
Face-ache
n. முகத்தின் நரம்பு வலி.
Face-card
n. சீட்டாட்டத்தில் அரசன்-அரசி-அடிமை முகப்படமுள்ள சீட்டு.
Face-lifting
n. முகச்சுருக்கத்தை நீக்கி இளமைத் தோற்றத்தை அளிக்கும் அறுவைச் செயல்.
Facer
n. முகத்தில் அடிக்கும் அடி, திடீரென நிகழ்கிற பெரிய இக்கட்டு.
Facet
n. வைத்தின் பட்டை, பட்டையிட்ட பரப்பின் ஒரு முகப்புக் கூறு, கருத்துக்கூறு.
Facetiae
n. pl. வேடிக்கைப் பேச்சுக்கள், நொடிப்பேச்சுக்கள், கேலித்துணுக்குகள், நகைச்சுவை ஏடுகள், கேலித்துணுக்கு ஏட்டுப்பட்டியல், மறைக்கத்தக்க பொருள்கள்பற்றிய ஏட்டுத்தொகுதி.
Facetious
a. விளையாட்டுப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள, கிண்டலான, நகையாட்டான, நொடிபேசுகிற, குறும்புத்தன்மையுடைய.