English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fanciful
a. மனம்போன போக்குடைய, தன்போக்காய் நடக்கிற, கட்டற்ற கற்பனைகளில் ஈடுபடுகிற, பொருந்தாப்புனைவுகளுக்கு இடங்கொடுக்கிற, முரண்புனைவான சித்திர வேலைப்பாடுடைய, சித்திர அமைப்புள்ள, விசித்திரமான, முரண்புதுமை வாய்ந்த, இயல்முரணிய, உண்மையல்லாத, கற்பனையில் மட்டுமுள்ள.
Fancy
n. கற்பனை, மனத்திற்பாவிக்கும் திறம், தற்புனைவு, பாவனை, கருத்தில் தோன்றும் படிவம், மனத்தோற்றம், போலித்தோற்றம், மயக்கக்காட்சி, போலிப்புனைவு மருட்சிப்புனைவு, கட்டற்ற விருப்பம், மனம்போன போக்கு, ஆதாரமற்ற, நம்பிக்கை, தனி விருப்பு, விருப்பார்வம், காதல் ஈடுபாடு, விருப்பார்வப் பொழுதுபோக்கு, விருப்பார்வத்துறை ஆதரவாண்மை, விருப்பார்வத்துறை ஈடுபாடு, (பெ.) புனைவுருவான, விரும்பிய உருவுடைய, கற்பனாகாரமான, மனத்துக்குகந்த, கண்ணைக்கவர்கிற, இன்பார்ந்த, அழகுநயமிக்க, சித்திர வேலைப்பாடுடைய, கட்டற்ற, மனம்போனபோக்கான, பொதுநிலை கடந்த, பல்வண்ணமார்ந்த, நம்பமுடியாத, பொருந்தாப் பெருவிலையுடைய, (வினை) கருத்திற்புனைவு செய், கற்பனை செய், கருத்துருவாக்கிக்காண், மனத்திற் பாவனை செய், ஆர்வத்துடன் நம்பு, எளிதாக எண்ணு, ஆராயாது செய், ஆர்வத்துடன் விரும்பு, மகிழ்வார்வம் கொள், செருக்கி மகிழ், மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.
Fancy stores
புதுமைப்பொருளகம், பல்பொருள் அங்காடி
Fancy-dress
n. விருப்பார்வை உடை.
Fancy-fair
n. விருப்பார்வச் சந்தை.
Fancy-work
n. சித்திரத் துன்னல்.
Fandangle
n. பித்துக்கொள்ளி அணிகலன், கேலிவிளையாட்டு.
Fandango
n. விறுவிறுப்பான ஸ்பானிய ஆடல் வகை, ஸ்பானிய ஆடல் இசை வகை.
Fanfare
n. எக்காள முழக்கம், ஊதுகொம்புகளின் அதிர்வு.
Fanfaronade
n. செருக்குரை, தற்புகழ்வு.
Fang
n. பாம்பின் நச்சுப்பல், கூரியபல், பல்வேரின் அலகுக் கூறு, இயந்திரக்கருவியின் பல், (வினை) குழாயில் தண்ணீர் ஊற்றி இயக்கு.
Fan-tan
n. கிண்ணத்தின்கீழ் மறைத்தவைக்கப்பட்ட நாணயங்கள் முதலிய வற்றின் எண்ணிக்கையை ஊகித்துச்சொல்ல வைக்கும் சீன சூதாட்டம், சீட்டுச் சூதாட்டம்.
Fantasia
n. விதிக்கு இயையாச் செய்யுள் வகை, இசையமைதிக் கட்டளைக்குட்படாது, புனைவியற் போக்கிற்செல்லும் பாட்டு.
Fantastic
a. எல்லையில் கற்பனை சார்ந்த, பித்துக்கொள்ளித் தனமாக, இயல்முரணிய, நம்பமுடியாத, இயல்திரிபான, மனம்போன போக்கிற செல்கிற, விசித்திரப் பாணியில் அமைந்த.
Fantasy
n. உருவுபடைக்குந்திறம், கனவுருப் புனைவாற்றல், மனக்கண் வடிவம், கழியார்வ வரைவடிவு.
Fantee
n. கோல்டு கோஸ்ட் என்னும் ஆப்பிரிக்க மாநில நீக்ரோ வகுப்பு மக்கள் அல்லது மொழி.
Fantoccini
n. pl. (இத்.) சூத்திரப் பாவைக்கூத்து, நாண்பாவையாட்டம்.
Far
n. தொலைவிடம், (பெ.) தொலைவான, நெடுங்தொலை கடந்துள்ள, அப்பாலுள்ள, முனைத்த, நெடுங்காலங்கடந்த, (வினையடை) தூரத்தில், தொலைவிடத்துக்கு, நெடுந்தொலை கடந்து, முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில், முனைத்த நிலைநோக்கி, தீவிர நிலை தூண்டி, மிகவும் ஒவ்வாத நிலையில், மிகுதொலை வேறுபட்டு, மிகுந்த அளவில், பலபடி கடந்த, தீவிரமாக, நீடித்தகாலமாக, நீடித்த காலங்கடந்து, மிகவிலகி, தொடர்பு சிறிதுமின்றி, உரியதல்லாமல், கூடியதல்லாமல், அளவில் முனைத்து, அளவில் முனைப்பாக.