English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ha
int. வியப்பு-மகிழ்ச்சி-ஐயம்-வெற்றி முதலியவற்றைத் தெரிவிக்கும் வியப்பிடைச்சொல், ஆஸ்
Ha
v. தாழ்ந்த குரலில் முணங்கு அல்லது பாடு, வாயை மூடிக்கொண்டே பாடு, மந்த ஓசை செய், முரலு.
Ha ha
int. ஒலியோடு கூடிய சிரிப்பு.
Haaf
n. ஷெட்லாந்திலும் ஆர்க்னியிலும் ஆழ்கடல் மீன்பிடிப்பு நிலப்பகுதி.
Habeas corpus
n. கைதியைக் கொண்டு வரும்படி நடுவர் இடும் ஆணை.
Haberdasher
n. சிறுபொருள் விற்போர்.
Haberdashery
n. சில்லறை உடுப்புக்கள்-நாடா போன்ற சாமான்கள் விற்பனை.
Habergeon
n. (வர.) கையில்லாத இருப்புப் போர்க் கவச மேலங்கி.
Habile
a. திறமைவாய்ந்த, கைவல்ல.
Habiliments
n. pl. கஞ்சுகம், பணி உடுப்புக்கள்.
Habilitate
v. சுரங்கத் தொழிலிற்குச் செயல் மூலதனம் அளி, பல்கலைக்கழகப் பதவிக்குத் தகுதியாகு.
Habit
n. பழக்கம், மனப்பாங்கு, உடற்பாங்கு, வளரும் வகை அல்லது முறை, மகளிர் குதிரைச் சவாரிஉடுப்பு, சமய நெறியினர் உடுப்பு, (வி.) உடையணி, உடுத்திக்கொள்.
Habitable
a. குடியிருக்கத்தக்க, வசிக்கத்தக்க.
Habitant
n. குடியிருப்பவர், வசிப்பவர், பிரஞ்சு மரபைச் சேர்ந்த கனடா நாட்டினர்.
Habitat
n. தாவரம் அல்லது விலங்கின் இயற்கையான இருப்பு, மனை.
Habitation
n. உறைவிடம், 'பிரிம்ரோஸ் லீக்' என்னும் கழகத்தின் கிளைச்சங்கம்.
Habitual
a. பழக்கத்திலுள்ள, தொடர்ச்சியான, அடிக்கடி நிகழ்கிற, குறிப்பிட்ட பழக்கத்துக்கு ஆளாகிவிட்ட.
Habituate
v. பழக்கப்படுத்து.
Habitude
n. மனப்பாங்கு, உடற்பாங்கு, பழக்கம், போக்கு.