English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nabob
n. மொகாலயப் பேரரசின் மாகாணத் தலைவர், மண்டலிகர்,(வர.) இந்தியாவிலிருந்து பெருஞ்செல்வத்துடன் தாயகம் மீண்ட ஆங்கிலேயர், இன்பவாழ்க்கைப் பெருஞ்செல்வர்.
Naboths vineyard
n. காமுறப்படும் பொருள்.
Nacarat
n. கிச்சிலிப்பழ சிவப்புநிறம்.
Nacelle
n. விமான இயந்திர வேயுறை, வான்கலத்தின் சகடப் பகுதி.
Nacre
n. இறகு வடிவான கடலுயிர் வகை, இப்பி, சோழி முத்துச்சிப்பிகளின் தோட்டின் உட்புறம், சிப்பிமீன்.
Nadir
n. (வான்.) உச்சிக்கு நேரெதிர், தாழ்விற்கு எல்லை.
Nag
-1 n. ஏறிச் செல்வதற்குரிய மட்டக்குதிரை, (பே-வ.) குதிரை.
Nag
-2 n. குறை கண்டுபிடி, ஓயாது நச்சுப்படுத்து, தொல்லைப் படுத்து.
Nagana
n. தென் ஆப்பிரிக்காவின் கொடிய நச்சு ஈ வகையால் வரும் காய்ச்சல்.
Nagor
n. மேலே ஆப்பிரிக்க கலைமான் வகை.
Nail
n. நகம், கால்நகம், உகிர், விலங்கு-புட்களின் கொடுநகம், மெல்லலகுடைய பறவைகள் வகையின் மேலலகு மீதுள்ள காழ்ப்புடைப்பு, முற்கால நீட்டல் அளவைச் சிற்றலகு, இரண்டேகால் அங்குலம், (வினை.) ஆணி அடி, வரிசையாக ஆணி அடித்திறுக்கு, ஊசியால் பிணை, உறுதியாகப் பற்று, வலிந்து பிடி, பற்றி நிறுத்து, கவனத்தை அசையாது நிறுத்து.
Nail polish
உகிர்நெய், உகிரிப்பூச்சு, நகப்பூச்சு
Nail-brush
n. நகந்துடைக்கும் தூரிகை.
Nailed-up
a. நன்கு கட்டமைக்கப்படாத.
Nailery
n. ஆணி செய்யுமிடம்.
Nail-head
n. ஆணித் தலைப்பு, தரை, ஆணித்தலைப்புப் போன்ற சிற்ப ஒப்பனைக்கூறு.
Nailing
n. ஆணி அடித்தல், ஆணி செய்தல், பற்றியிறுக்கல், பற்றிப் பிடிப்பு.