English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nap
-1 n. சிறு துயில், அரைத்தூக்கம், பகலுறக்கம், (வினை.) சிறுதுயில் கொள், சற்றே தூங்கிவிழு.
Nap
-2 n. மென்துய்ப்பரப்பு, ஆடையில் மேன்முனைப்பான வெட்டுத் துய்ப்பரப்பு, மெத்தென்ற மென்பரப்பு, (வினை.) ஆடையில் மேல் முனைப்பான வெட்டுத்துய்ப்பரப்பு அமை, தேங்காய்ப்பூப் பின்னல் அமை.
Nap
-3 n. தனித்தனிக் கட்சியான ஐவராடும் சீட்டாட்ட வகை, ஐவர் சீட்டாட்ட வகையில் ஐங்குறி மதிப்புக் கோரிக்கை, ஐவர் சீட்டாட்ட வகையில் ஐம்பொறிக் கெலிப்பு, வெற்றியுறுதி தரும் குதிரைப் போட்டிப் பந்தயக்குறிப்பு, வெற்றியுறுதியுடைய துணிந்த தேர்வு, உடைமை முழுமையும் ஈடுபடு
Nape
n. கழுத்தின் பின்புறம், பிடரி, பின் கழுத்து.
Napery
n. மேசைத்துணி, குடும்பப் பயனீட்டுக்குரிய துணி.
Nap-hand
n. வெற்றியுறுதிக்கான நம்பிக்கைதரும் துணிந்த தேர்வுக்குரிய நிலை.
Naphtha
n. இரசகற்பூரத் தைலம்.
Naphthalene
n. இரசகற்பூரம்.
Naphthalize
n. இரசகற்பூரத் தைலமூட்டு, இரசகற்பூரத் தைலங்கலந்து பதனூட்டு.
Napkin
n. குறுந்துணி, துடைப்புக்குட்டை, குழந்தையின் அணையாடை.
Napkin-ring
n. துடைப்புக்குட்டை வளையம்.
Napoleon
n. இருபது பிரஞ்சு வௌளி கொண்ட முதல் நெப்போலியன் காலத்திய பிரஞ்சு தங்க நாணயம், உயரக் கால் புதையரணம், தனித்தனி ஆட்டமாக ஐவராயிடும் பிரஞ்சு சீட்டாட்டவகை, பனிக்கட்டியூட்டப்பட்ட உயர்தர அப்பவகை.
Napoleonic
a. பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய, முதலாம் நெப்போலியனைப் போன்ற, மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய.
Nappy
a. சாராய வகையில் நுரைக்கிற, கடுமுனைப்பான.
Napu
n. தென்கிழக்காசிய பகுதியலுள்ள கத்தூரிமான் வகை.
Narceine
n. அபினியிலிருந்து எடுக்கப்படும் காரம், அபினியைப்போல் பயன்படுத்தப்படும் அபினிக்காரம்.
Narcissism
n. தற்பூசனை, தற்காதல், தற்காதற் கோளாறு.
Narcissus
n. முனைத்த மணமுடைய வெண்மலரும் அடித்தண்டுங்கொண்ட செடிவகை.
Narcolepsy
n. துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை.
Narcosis
n. மரமரப்பு மருந்தூட்டிய நிலை, மரமரப்பு மருந்தூட்டல், நோவுணர்ச்சியற்ற நிலை.