English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Narcotic
n. மரமரப்பூட்டும் மருந்து, நோவுணர்ச்சி அகற்றும் பொருள், மயக்க மருந்து, துயிலூட்டும் பொருள், (பெ.)மரமரப்பூட்டுகிற, ஊறுணர்ச்சியகற்றுகிற, மயக்கமூட்டுகிற, துயிலூட்டுகிற, நோவுணர்ச்சியற்ற நிலை சார்ந்த.
Narcotism
n. மயக்க மருந்தின் செயலாற்றற் பண்பு.
Narcotize
v. மயக்கமூட்டும் மருந்தின் செயலுக்கு உட்படுத்து.
Narghile
n. நீரோடி குடிப்புக்குழல், நீருடாகப் புகை வரும்படி அமைக்கப்பட்ட புகைபிடிக்குங் குழாய்.
Narrate
v. எடுத்துரை, கதையாகக் கூறு, கதையாக எழுது.
Narration
n. எடுத்துரைத்தல், தொடர்பாகச் சொல்லுதல், கதைப்படுத்துதல்.
Narrative
n. கதை, கதைக்கூற்று, கூற்று, தொடர் உரை, கதைப்பகுதி, நிகழ்ச்சி விரிவுரை, (பெ.) கதை இயல்பான, கதை வடிவான, கதைக் கூற்றுக்குரிய, தொடர் உரை சார்ந்த, வரிசைப்பட எடுத்துரைக்கிற.
Narrator
n. கதை கூறுபவர்.
Narrow
a. ஒடுக்கமான, அகலக்கட்டையான, நெருக்கமான, இடையலங் குறைந்த, கூம்பிய, குறுகிய, விரிவகற்சிக்கிடமில்லாத, இடவளமற்ற, முட்டுப்பாடான, சுருங்கிய குடுவை போன்ற, எல்லைக்குறுக்கமான, அளவு வரையறைப் பட்ட, குறுகிய அளவான, சிறிதே விலகிய, குறுகிய நோக்கமுடைய, குறுகிய தன்னலமுடைய, தாராள மனப்பான்மையற்ற, குறுகிய வெறிபிடித்த, கஞ்சத்தனமான, கையிருக்கமான, கரஞ்சிக்கனமான, செல்வவளமற்ற, குறுட்டுத்த தப்பெண்ணமுடைய, முகு கண்டிப்பான, நுணுக்கிக் காண்கிற, (ஒலி.) செறிவான, (வினை.) ஒடுக்கு, சுருக்கு, குறுக்கு, குறைபடு, கட்டுப்படுத்து, அடைத்திரு, ஒடுங்கு, சுருங்கு, துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
Narrow-minded
a. குறுகிய நோக்கம் வாய்ந்த, தாராள மனப்பான்மையற்ற, பழைய குருட்டுத் தப்பெண்ணங்களை உடைய.
Narrows
n.pl. இடுக்கு வழி, ஒடுங்கிய கால்வாய், ஆற்றிடுக்கு, கடலிடுக்கின் மிக ஒரங்கிய பகுதி, தெருவின் ஒடுங்கிய இடம்.
Narthex
n. பெண்டிர்-நோன்பிகள்-சமயப் புத்தேற்பாளர்கள் வருவதற்குரிய முற்காலத் திருக்கோயிலின் அழியிடப்பட்ட மேற்கு முப்ப்புவாயில்.
Narwhal
n. கொம்பன் திமிங்கலம்,ஒற்றை அல்லது இரட்டைத் தந்தங்களையுடைய திமிங்கல வகை.
Nasal
n. மூக்கொலி,மூக்கொலியெழுத்து, மூக்கிடைத்தட்டு இணை எபு, கவசத்தில் மூக்குறுப்பு, (பெ.) மூக்குக்குரிய, மூக்கு வழியாய் ஒலிக்கிற, மூக்கொலி சார்ந்த.
Nasality
n. மூக்கொலிப்பு.
Nasalization
n. மூக்கொலிப்படுத்துதல்.
Nasalize
v. மூக்கொலிப்படுத்து.
Nascency
n. தோற்றம் எடுக்கும் நிலை, முதிரா நிலை.
Nascent
a. பிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத.
Naseberry
n. சடாமாஞ்சிப்பழம், சடாமாஞ்சி மஜ்ம்.