English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nail-scissors
n. நகம் வெட்டி.
Nainsook
n. மிக நேர்த்தியான பருத்தியாடை வகை.
Naivete
n. இயலௌதமை, பயிலா நடை, சூதறியாப் பேச்சு, கரவின்மை.
Naked
a. உடுப்பற்ற, மேற்பார்வையற்ற, பாதுகாப்பற்ற, உறையற்ற, மேல் வளர்ச்சியற்ற, மரஞ்செடி கொடியற்ற, புல் புதரற்ற, மழுங்கலான, வெறுமையான, புறத்திரையற்ற, அகநிலைப் பாறை வகையில் புறந்தோன்றுகிற, புனைவற்ற, ஒப்பனையற்ற, உருமாறாத, இயல் எளிமை வாய்ந்த, மறைவற்ற, ஔதவற்ற, அறை-கட்டிட வகையில் தட்டுமுட்டற்ற, மரஞ்செடி வகையில் இலைதழையற்ற, துணையாதரவற்ற, துணை இணைவுகளற்ற, கருவித்துணை இல்லாத, வெறுமையான, வெட்டவௌதயான.
Naker
n. முழா, போர்ப்பறை.
Namable
a. பெயர் கூறத்தக்க, பெயர் குறிப்பிடப்படும் தகுதியுடைய.
Namby-pamby
n. பிதற்றுரை, சுவையற்ற பேதைமையுரை, (பெ.) சுவையற்ற, சுவையற்ற, போலிப் பசப்பான.
Name
n. பெயர், அடைமொழி, பண்பு கட்டியழைக்கும் சொல், பட்டப்பெயர், மதிப்பார்ந்த பெயர் வழக்கு, புகழ், மதிப்பு, சால்பு, குடிப்பெயர், குடும்பம், இனக்குழு, பெயர் மட்டிலுமான நிலை, பொருண்மையற்ற நிலை, சிறப்பின்மை, போலித்தன்மை, மேற்கோள், முறைமை, வேறு ஆட்பெயர்ப்புனைவு, (வினை.) பெயரிடு, பெயரிட்டாழை, பெயர் கூறு, குறி, தனிப்படக் குறிப்பீடு, அமர்வி, பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு, சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு, சான்றாக எடுத்துரை, குறித்து முடிவுறுதி கூறு.
Name-child
n. பெயராளன், தன் பெயரிட்ட குழந்தை.
Named
a. பெயரிடப்பட்ட, பெயரையுடைய, என்ற பெயருடைய.
Name-day
n. தன் பெயருக்குரிய திருத்தகைப் புனிதர் திருநாள்.
Nameless
a. பெயரற்ற, பெயரறியப்படாத, பெயர் குறிப்பிடப்படாத, பெயர்குறிக்க வேண்டாத, பெயர் குறிக்குந்தகுதியில்லாத, முக்கியத்துவமற்ற, மிகப் பொதுப்படையான, அற்பமான, புகழற்ற, வரையறுத்துரைக்க முடியாத, வருணிக்க முடியாத, சொற்கடந்த, மிக மோசமான, வெறுக்கத்தக்க, அருவருப்பான.
Name-part
n. நாடகத்துக்குரிய பெயர்க் காரணமான பகுதி, பெயர்க்கூறு.
Name-sake
n. தம் பெயரை உடைய மற்றொருவர், தன் பெயரைக் கொண்ட மற்றொரு பொருள்.
Nancy
n. செயற்கைப் புணர்ச்சியாளர், தன்னொத்த பால் அவாவுடையவர், (பெ.) தன்னொத்த பால் அவாவுடைய.
Nankeen
n. மஞ்சள் பருத்தியால் செய்யப்பட்ட நூல் துணி வகை, மஞ்சள் அல்லது வௌதறிய மஞ்சள் நிறம்.
Nanny
n. வௌளாட்டின் பெட்டை, செவிலித்தாய்.