English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wa, pron, pl.
நாம், நாங்கள், தனிச்சிறப்புத் தன்மைப் பன்மை.
Waac
n. மகளிர் உதவிப்படைப் பிரிவினர்.
Waaf
n. மகளிர் துணை விமானப் படைப்பிரிவினர்.
Wacke
n. எரிமலைப்பாறைச் சிதைவுக் களிமண் வகை.
Wad
n. செம்முப்பொருள், இடை இடச்செறிப்பு மென்பொருள், துப்பாக்கிக்குழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு, (வினை.) இடைவைத்துச் செம்மு, மென்பொருளை இடையே வைத்து அடை, திணி, மென்பொருளால் உள்வரியிடு, ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி, துப்பாக்கிக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை, துப்பாக்கி மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை.
Wadded
a. மெல்லடை காப்பிட்ட, இடையே தொய்பொருள் செம்மி வைக்கப்ட்ட.
Wadding
n. மென்பஞ்சுறை, மேலடைகாப்புத் திண்டுறைப்பொருள், இடைகாப்படைவுப் பொருள், துப்பாக்கிக் குழல் அடைக்கம் வட்டுக்குரிய ஒட்டுக்கம்பளப் பொருள்.
Waddle
n. வாத்து நடை, வாத்துப்போன்ற புடையசைவாட்ட நடை, (வினை.) வாத்துப்போல் நட, புடை அசந்து நட.
Waddy
n. செண்டுத்தடி, ஆஸ்திரேலிய நாட்டுப் படைக்கலக்குறுந்தடி.
Wade
v. சேறு கட, நீரில் நடந்து செல்,பனிமீது செல், பொடி மணலில் நட, நடந்து ஆழமற்ற நீர்நிலை நட.
Wader
n. நீரில் நடந்து செல்பவர், நீரில் நடக்கும் பறவை வகை.
Waders
n. pl. மீன் பிடிப்பவரின் நீர்புகா உயர் புதைமிதியடி.
Wady
n. கள்ளக் கடவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குள் மெக்சிகோவிலிருந்து கள்ளமாக வந்தேற முயலுபவர்.
Wafd
n. எகிப்து நாட்டுத் தீவிரத் தேசீயக்கட்சி.
Wafer
n. மென்தகட்டப்பம், இறைவழிபாட்டில் வழங்கப்படும் மெல்லப்பச் சில்லு, அலுவலகப் பசை வார்க்கட்டு வில்லை, சிவப்பு நாடா, அலுவலகப் பத்திரங்களின் மீது ஒட்டப்படும் சிவப்பு முத்திரைத்தாள், (வினை.) சிவப்பு முத்திரைத் தாள் ஒட்டு, சிவப்பு நாடா இடு.
Wafer-cake
n. தித்திப்பு மென்தகட்டப்பம்.
Wafery
a. தகட்டப்பம் போன்ற, மிக மெல்லிய.
Waffle
-1 n. குழிவப்பம், ஈரடைவுக் குழிவுக்கலத்தில் செய்யப்படும் இட்டலி போன்ற அப்பம்.
Waffle
-2 n. ஓயாத வீண் வம்பளப்புப் பேச்சு, (வினை.) ஒயாது சளசளவென்று வம்பளந்து கொண்டிரு.