English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Waffle-iron
n. குழிவெப்பக் கலம், உட்புறக் குமிழ்களுடன் இருபாதியாகச் செய்யப்பட்ட அப்பம் சுடுகலம்.
Waft
n. வீச்சலைவு, பறவைச் சிறகின் வீச்ச, வாடை வீச்சலை, மென் மண அலை, காற்றில் மிதந்துவரும் வாசனை, புகை மெல்லலை, இசை மெல்லொலி அலை, மெல்லலை ஆவி, மெல்லலை வீச்சு, எளிதில் மறையும் கணநேர மனநிலை, (கப்.) இடர்ப்பாட்டுச் சைகை அடையாளம், சுருள்கொடி அல்லது கொடி முடிச்சு அல்லது ஆடைமுடி மூலம் தெரிவிக்கப்படும் இடர்ப்பாட்டறிவிப்புச் சைகை, (கப்.) இடர்ப்பாட்டு அடையாள அறிவிப்பு, (வினை.) மெல்ல வீசி, அடித்துச் செல், மிதவலாகக் கொண்டு செல், மெல்லக் கொண்டு சென்று பரப்பு, வீசியடி, காற்றில் மிதந்து செல்.
Wag
-1 n. அசைவாட்டம், ஓர் அசைப்பு, வாலாட்டம், (வினை.) உறுப்பினை ஆட்டு, வால் ஆடவிடு, உறுப்பு ஊசலாடச் செய், உறுப்பு வகையில் அடு, வால் வகையில் ஊசலாடு.
Wag
-2 n. குறும்பன், கேலிக்காரன்.
Wage
-1 n. நாட்கூலி, உழைப்புக்கூலி, வேலைநேரக் கணிப்புச் சம்பளம்.
Wage
-2 v. போர்-சச்சரவு வகையில் நடத்து, கொண்டு செலுத்து.
Wage-earner
n. கூலி வேலையர்.
Wage-freeze
n. கூலிவீத உறைவு, வரையறுத்த காலம் வரை கூலிவீதத்தை நிலவரமாக வரையறுத்தல்.
Wage-fund
n. ஆமுதல் கூலியின் அளவை வரையறுப்பதாக முன்பு கருதப்பட்ட சமுதாய மொத்த இருப்பு முதல்.
Wager
n. பந்தயம், பணையம், (வினை.) பந்தயங்கட்டு,பணையம் வை.
Wages
n. pl. உழைப்புக்கூலி, உழைப்பூதியம்.
Waggery
n. கேலி, குறும்பு.
Waggish
a. கேலியான, குறும்பான.
Wagon
n. சகடு, நான்கு சக்கரப் பாரவண்டி, புகைவண்டித் தொடரில் திறந்த பாரவண்டி.
Wagoner
n. பாரவண்டியோட்டி.
Wagon-lit
n. இரயிலில் படுக்கை வசதிப்பெட்டி.
Wagtail
n. வாலாட்டு குருவி.
Wahabee, Wahabi
இஸ்லாமிய கிளைப் பிரிவினர்.
Waif
n. ஆளற்ற பொருள், கேட்பாரற்ற விலங்கு, அலைவாரி, கடலில் அடித்துக்கொண்டுவரப்பட்ட பொருள், வானவாரி,அறியா வழியாகவந்த பொருள், ஆளற்றவர், வீடற்றவர், அநாதை, உதவியற்றவர், துணையிலாக் குழந்தை, எடுப்புக் குழந்தை.
Wail
n. ஓலம், ஒப்பாரி, புலம்பல், (வினை.) ஒலமிடு, ஒப்பாரி வை, புலம்பு.