English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wailful
a. துன்பம் நிறைந்த, துயரம் செறிந்த.
Wailing
n. புலம்பல், அழுமை, (பெ.) புலம்புகிற, அழுகிற.
Wainscot
n. பலகை வரி, அறையின் சுவர் உள்வரி மர வேலைப்பட்டிகை, அகப்பாவரி, மரவேலை போன்ற சுவர் உள்வரியீடு, அந்துப்பூச்சி வகை, (வினை.) பலகை வரிசெய்,அறையின் சுவர் உள்வரி மரவேலைப்பட்டிகையிடு.
Waist
n. இடுப்பு, இடை, இடையிடுக்கம், இடுக்கப் பகுதி, பொருளின் இடையிடுக்கப் பகுதி, ஆடையின் இடைச்சுற்றுப் பகுதி, பாவாடை இடைச்சுற்ற இழைப்ட்டி, நாப்பண், கப்பலின் நடுப்பகுதி, கச்சு, இரவிக்கை.
Waist-band, waist-belt
n. அரைக் கச்சு, இடுப்புப்பட்டி.
Waistcoat
n. இடுப்பளவு சட்டை.
Wait
n. காத்திருப்பு, காத்திருப்பு நேரம், புறங்கடைப் பாடகர் குழுவில் ஒருவர், பதிவிருக்கை, (வினை.) காத்திரு, தாமதி, பொறுத்திரு, தங்கியிரு, எதிர்பார்த்திரு, குற்றேவல் செய், பணிசெய், தொண்டு ஊழியஞ் செய், உணவுமேசைப் பணியாளாக வேலை செய், அருகுநின்று வேண்டிய பணியாற்று, வருகை நோக்கி உணவை வைத்துக் காத்திரு.
Wait-a-bit, wait-a-while
n. நாயுருவி வகை, ஆடைபற்றியீர்த்துக்கொள்ளும் தென் ஆப்பிரிக்க முட்செடி வகை.
Waiter
n. காத்திருப்பவர், எதிர்ப்பார்த்திருப்பவர், தங்கியிருப்பவர், உணவு விடுதி மேசைப் பணியாள், தாம்பாளம், தட்டு, உணவு மேசை இயங்கு தட்ட வண்டி, அருந்து மேசைச் சுழல் முகடு.
Waiting
n. காத்திருக்கை, பொறுத்திருத்தல், எதிர்பார்த்தல், குற்றேவல் செய்தல், உணவுமேசைப் பணியாளராகப் பணிபுரிதல்.
Waiting-list
n. காத்திருப்போர் பட்டியல்.
Waiting-maid, waiting-woman
n. பணிப்பெண்.
Waiting-room
n. காத்திருக்கை அறை.
Waitress
n. மேசைப் பணிப்பெண்.
Waive
v. மனமார விட்டுக்கொடு, உரிமை வற்புறுத்தாது விடு.
Waiver
n. விட்டுக்கொடுப்பு, தளர்த்தீடு.
Wake
-1 n. திருக்கோயில் நிவந்த நோன்பு விழிப்பு, நோன்பு விழிப்பு விழாக் களியாட்டயர்வு, பிணக் காவல் விழிப்பு, பிணக்காப்பு விழிப்புக் களியாட்டம், (வினை.) உறக்கம் விட்டெழு, உறக்கம் கலை, விழிப்பூட்டு, உறங்காது விழித்திரு,விழிப்புக் கொள், விழிப்படை, அயர்வுநிலை அகற்ற
Wake
-2 n. பின்காப்பமைதி, செல்லும் கப்பலின் பின்பக்கத்துள்ள உலைவு குன்றிய பின்பகுதி, பின்கல அலைவு,பறக்கும் வான்கலத்தின் பின்புறமுள்ள உலைவுமிக்க காற்றுப் பகுதி.
Waked
v. 'வேக்' என்பதன் இறந்த கால-முடிவெச் வடிவங்களுள் ஒன்று.