English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gab
n. பிதற்றுரை, உளறல், பொருளில் உரை.
Gabardine
n. கம்பளி உள்வரி இணைவுடைய பதி அல்லது பட்டுத்துணிவகை, மழைகாப்புச் சட்டைக்குரிய துணிவகை.
Gabble
v. தடவித்தேடு, கைகால்களைப் பரப்பிப்கொண்டு துழாவு.
Gabble
n. பிதற்றல், உளறல், விளங்காப் பேச்சு, (வினை) வாத்துப்போலக் கத்து, சளசளவென்று பேசு, தௌதவில்லாமற் பேசு, இணைப்பில்லாமற் பேசு, உரத்தகுரலுடன் கடகடவென்று படி, மிகுவிரைவாகப் பேசு.
Gabelle
n. பிரான்சு நாட்டில் புரட்சிக்காலத்துக்கு முற்பட்ட உப்புவரி, வரி.
Gabion
n. அரண் கட்டுமானப் பாளச்சட்டம், அரண் கட்டுதலில் அல்லது பொறியமைத்தில் மண்ணால் நிறைக்கப்பட்ட பிரம்பால் அல்லது உலோகப்பட்டைகளால் ஆன நீள் உருளைச்சட்டம்.
Gabionade
n. அரண் கட்டுமானப் பாளச்சட்டங்களின் வரிசை.
Gable
n. மஞ்சடைப்பு, கன்ன முக்கோணச்சுவர், மஞ்சடைப்பு முகடுடைய சுவர், கதவு பலகணிக்குரிய மஞ்சடைப்பு வடிவான மேற்கட்டி.
Gable-end
n. கட்டிடக் கோடியிலுள்ள மஞ்சடைப்பு சுவர்.
Gablet
n. சிறு முக்கோணச் சுவர்முகடு.
Gad
-1 n. வீணாக அலைந்துதிரிதல், (வினை) வீணாக அலைந்துதிரி, சோம்பித்திரி, படை வகுப்பிலிருந்து அணிமீறிச் சென்று அலை.
Gad
-2 int. அட கடவுளேஸ் கடவுளாணைஸ்
Gadabout, gadder
சுற்றித்திரிபவர்.
Gaddi
n. (இ.) தவிசு, அரியணை, அரசுநிலை.
Gad-fly
n. உண்ணி, தொந்தரவு கொடுப்பவர், எரிச்சலுட்டுபவர், திடீர்த்தூண்டுதல்.
Gadget
n. இயந்திர நுணுக்கப் பகுதி, சிறு பொறியமைப்பு, சிறு சூழ்ச்சித்திறம்.
Gadhelic
n. ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி, (பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்க்குரிய.
Gadoid
n. கடல்மீன் இனப்பிரிவு. (பெ.) கடல்மீன் இனப்பிரிவு சார்ந்த.
Gadroons
n. pl. விளிம்பு ஒப்பனைக்குரிய உட்குவிந்த வளைவு வரிசை.