English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gael
n. ஸ்காத்லாந்து நாட்டின் பழங்குடி மக்கள் இனத்தவர்.
Gaelic
n. ஸ்காத்லாந்து கெல்டிக் இனத்தவர் மொழி, ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்களின் மொழி, (பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி, ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்களைச் சார்ந்த.
Gaff
-1 n. மீன்குத்தம் ஈட்டி, கோல் பாய்மரத்தின் மேற்புறத்திலுள்ள நீள்கம்பு, (வினை) இரும்புக்கொக்கித் தடியால் மீனைப் பற்று.
Gaff
-2 n. மறை திட்டம், சதி.
Gaffe
n. பெருந்தவறு, ஆராயாத செயல் அல்லது கூற்று.
Gaffer
n. நாட்டுப்புறக் கிழவர், பணியர் தொகுதியின் தலைமைப் பொறுப்பாளி, முதிய ஆண்.
Gag
n. வாயடைப்பு, வாய்க்கட்டு, வாய் திறந்தபடியே இருக்கும்படியாகப் பல்மருத்துவர் இடும் பொறியமைப்பு, சட்டமன்றத்தின் பேச்சு நிறுத்த ஆணை, நாடக உரையாடலிடைய திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகைத்திறத்துணுக்கு, கேலிக்கூத்து, மோசடி, (வினை) வாயடைப்புச் செய், பேச்சடக்கு, பேச்சுரிமை அடக்கு, சட்ட மன்றத்திற் பேச்சு நிறுத்த ஆணையிடு, நாடக உரையாடலிடையே இடையிட்டுப்பேசித் தடங்கல்செய், குதிரைக்கு வாய்ப்பூட்டிடு, ஏமாற்று, ஏமாற்றிப்பழகு, மூச்சுமுட்டு, ஓங்கரி, குமட்டல், கொள்ளு.
Gag-bit
n. குதிரைகளை ஒடுக்கிப் பழக்குவதற்குப் பயன் படுத்தப்படும் வாய்ப்பூட்டுக் கருவி.
Gage
-1 n. அடகுப் பொருள், மற்போர் அழைப்புக்காக எறியப்படும் கையுறை, (வினை) அடகு வை, பணயம் வை, பந்தயம் வை.
Gage
-3 n. மணமுள்ள பச்சை முந்திரி வற்றல்.
Gaggle
n. வாத்துகளின் திரள், பெண்டிர்கும்பு, (வினை) வாத்து வகையில் கத்து, கூச்சலிடு, கொக்கரி.
Gag-man
n. இசை நாடக நிகழ்ச்சிகளிடையே திட்டமிட்ட நகைத்திறத் துணுக்குகளை அமைப்பவர்.
Gag-rein
n. குதிரைகளைப் பயிற்சிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் வாய்ப்பூட்டுக் கருவிகளமைந்த வலுவுள்ள கடிவாள வார்.
Gaieties
n.pl. களியாட்டங்கள், வேடிக்கை, விளையாட்டுக்கள், விழாக்காலம், விழா நிகழ்ச்சிகள், அவிர்மை.
Gaiety
n. மகிழ்ச்சி, களிகிளர்ச்சி.
Gailkwar
n. இந்தியாவில் பரோடா நாட்டின் தலைவர்.
Gain
n. பேறு, ஊதியம், இலாபம், செல்வப் பேறு, உடைமைப்பெருக்கம், வருவாய்பெருக்கம், (வினை) பெறு, ஈட்டு, ஆதாயம் பெறு, வெற்றியடை, கெலி, கெலிப்புப் புள்ளிகள் பெறு.
Gainful
a. ஊதிய மிகுதியுடைய, ஆதாயமுள்ள.'