English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Galosh.
n. புதைமிதியடி மேலுறை, மிதியடிமீது ஈரமும் அழுக்கும் படாமற் காக்கும் தொய்வக உறை.
Galumph
v. வெற்றிக் கும்மாளம் அடித்துச்செல், பரணி பாடிச் செல்.
Galvanic
a. (வர.) மின் ஆற்றல் சார்ந்த, மின் ஆற்றலால் விளைந்த, ஆற்றலுண்டுபண்ணுகிற, திடீரென நிகழ்கிற, மிக் ஆற்றல் போன்றியங்குகிற, புன்னகையிலும் அசைவிலும் திடீரென்றும் செயற்கையாகவும் தோன்றுகிற.
Galvanism
n. (வர.)மூல மினசேமகல அடுக்கிலிருந்து பாயும் மின்னியக்கம், மருத்துவத்துறையில் பயன்படுத்தப் படும்நேர்மின்னோட்டம்.
Galvanize
v. மின்னாற்றலால் இயக்கம் தூண்டு, மின்னாற்றலின் செயல்போன்ற இயக்கம் தூண்டு, போலி உயிர்ப்புத்தோற்றங் கொடு, மின்பிரி இயக்கமூலம் உலோகப்பூச்சிடு, இரும்பு துருப்பிடிக்காமல் துத்தநாகப் பூச்சுப்பூசு.
Galvanography
n. செப்புததகடுகளின் மின்பிரிப்பூச்சுமூலம் செதுக்குவேலை செய்யும் முறை.
Galvanometer
n. மின்னோட்டமானி.
Galvanoplasty
n. மின்பிரிப்பூச்சுமானம், மின்பிரி இயக்க மூலம் உலோகத்தின் மேல் மற்றோர் உலோகத்தினால் மேற்பூச்சிடும் முறை.
Gamba, gambado
சுர மண்டலில் நரப்பிசை ஒலி தரும்இசைமேளத் தடைப்புழை.
Gambier
n. பதச்சாறு, தோல் பதனிடுதலிற் பயன்படும் காரமும் உவர்ப்புமுள்ள மூலிகைச்செடிச் சாறு.
Gambist
n. சுரமண்டல் இசைக்கருவி வாசிப்பவர்.
Gambit
n. சதுரங்க ஆட்டத்திற் காலாட்களை வெட்டுக்கொடுத்து இலக்கிணை அடையும் ஆட்டத்தொடக்க முறை, தொடக்கச் செயற்கட்ட நடவடிக்கை.
Gamblere
n. சூதாடி, செயல்துறைகளில் சூதாட்டமாடுபவர்.
Gambloe
n. சூதாட்டம், இடருள்ள முயற்சி ஈடுபாடு, (வினை) சூதாடு, போரிலும் பணத்துறையிலும் பெருவெற்றிகளை அடைவதற்காகப் பேரிடர்ப்பாடுகளை மேற்கொள், பெருவெற்றி நாடித் துணிவு முயற்சியில் ஈடுபடு.
Gamboge
n. மக்கி, மஞ்சள்வண்ணப் பொருளாகப் பயன்படும் மரப்பிசின் வகை.
Gambol
n. குதியாட்டம், துள்ளிவிளையாடல், (வினை) துள்ளிவிளையாடு.
Game
-1 n. விளையாட்டு, வேடிக்கை, ஆட்டமுழு நிகழ்ச்சி, போட்டி விளையாட்டு, சீட்டுவிளையாட்டிலும் வரிப்பந்தாட்டத்திலும் ஆட்டப்பிரிவு, ஆட்டத்தில் வெற்றிக்குரிய எண்ணிக்கதொகுதி, ஆட்டமுறைமை, வாணிகத்துறையில் ஆட்டத்துணைக்கருவிகலத் தொகுதி, வேட்டையாடப்பட்ட விலங்கு புள்ளினத
Game
-2 a. கால் கை முடமான, நொண்டியான, உறுப்புக்குறைந்த.
Game-act
n. விலங்கு-புள் வேட்டை உரிமை பற்றிய சட்டம்.
Game-bag
n. வேட்டையாளர் கொல்லப்பட்டவற்றைக் கொள்ளும் பை.