English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gallivant
v. வீணாகச் சுற்றித்திரி.
Gall-nut
n. கசப்புக்காய், மர வகையில் மை செய்யப்பயன் படுகிற புற வளர்ச்சியான கரணை.
Gallomania
n. பிரஞ்சு நாட்டுப் பழக்கவழக்கங்களில் வெறியார்வம்.
Gallon
n. 'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு.
Galloon
n. கட்டு இழைக்கச்சை, ஆடைவிளிம்பில் இணைக்கப் படும் கசவாலான இழைக்கச்சை.
Gallop
n. நாலுகாற் பாய்ச்சல், நாலுகாற் பாய்ச்சற் குதிரை இவர்தல், (வினை) நான்குகால். பாய்ச்சலிற் செல், பாய்ந்தோடு, குதித்தோடு, குதிரையை நாலுகாற் பாய்ச்சலிற் செலுத்து, விரைவேகத்தில் வாசி, வேகமாக ஒப்பி, விரைந்து பேசு, வேகமாகச் செல், விரைந்து இயங்கு, வேகமாக முன்னேறு.
Gallopade
n. சுறுசுறுப்பான எழுச்சியுள்ள அங்கேரிய நாட்டுப் நடனம்.
Galloper
n. நான்குகாற் பாய்ச்சலிற் செல்பவர், வேகமாகச் செல்வது.
Gallovidian
n. ஸ்காத்லாந்திலுள்ள 'காலோவே' என்னும் பகுதிக்குரியஹ்ர், (பெ.) 'காலோவே' பகுதியைச் சேர்ந்த.
Galloway
n. உறுதிவாய்ந்த குட்டையான வளர்ப்பினக்குதிரை வகை, குட்டையான குதிரை, கால்நடை வளர்ப்பின வகை.
Gallows
n.pl. தூக்குமரம், கொலைமரம், தூக்குதண்டனை, தூக்குமர அமைப்பை ஒத்த சமையற்கட்டின் உறி, உடற்பயிற்சிக்குரிய கருவி.
Gallows-bird
n. தூக்குதண்டனைக்குத் தகுதியானவர்.
Gallows-free
a. தூக்குதண்டனை இடரினன்று விடுபட்ட.
Gallows-ripe
a. தூக்குதண்டனைக்குத் தகுதியான.
Gallows-tree
n. தூக்குமரம்.
Gall-stone
n. பித்தப்பையில் விளையும் கல்போன்ற கடும்பொருள்.
Gallup poll
n. பல்திறக் குழுக்களிலிருந்தும் தனி ஆட்கள் கருத்தறிந்து பொதுமக்கள் கருத்தறியும் முறை, பொது மக்கள் வாக்குரிமை முடிவை முன்கூட்டியே சோதித்தறியும் முறை.
Galop
n. இரண்டாவது நாலாவது காலத்துக்குரிய சுறுசுறுப்பான நடனவகை, (வினை) இரண்டாவது நாலாவது காலத்துக்கு உரிய விரைநடன வகை ஆடு.
Galophil
n. பிரஞ்சு நாட்டுமீது பற்றார்வம் கொண்டவர்.