English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gallery
n. நுழைமாடம், இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை, முகப்புத்தளம், எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம், ஊடுவழிக்கூடம், இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி, படைத்துறை ஒதுங்கிய இடைவழி, சுரங்க நிலவறை வழி, சுற்றுமேடை வழி, திருக்கோயில் பேச்சுமேடை, பாடகர் மேடை, மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை, கலைக்காட்சிக்கூடம், நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை, உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள், விளக்குப்புகைக்குழாய் தாங்கி, (வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து, சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு.
Galley
n. ஒரே தளமுள்ள தட்டையான தாழ்ந்த கப்பல் அடிமைகளாலும் குற்றவாளிகளாலும் துடுப்புகளினால் தள்ளிச் செலுத்தப்படுங் கப்பல், பண்டைய கிரேக்கரின் அல்லது ரோமபுரியினரின் பெரிய படகு, கப்பலில் சமையலறை, அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு.
Galley-slave
n. கப்பலில் துடுப்பு வலிக்கும்படி தண்டிக்கப்பட்ட குற்றவாளி, ஊழியன்.
Galleyworm
n. துடுப்புப்போன்ற அமைப்புள்ள பலகால்களுடைய பூச்சிவகை.
Gall-fly
n. மரவகையில் காழ்ப்பூட்டும் பூச்சிவகை.
Galliambic
a. காடுல்லஸ் என்ற கிரேக்கக்கவிஞன் பயன்படுத்திய க்ஷ்அசையுடைய இருசீரடி யாப்புக்குரிய.
Galliambics, n, pl.
காடுல்லஸ் என்ற கிரேக்கக்கவிஞன் பயன்படுத்திய க்ஷ்அசையுடைய இருசீரடி யாப்புச் செய்யுள் வகை.
Galliard
n. மூன்றாம் காலப் பாணியில் இருவர் ஆடற்குரிய விரைதுடி நடனவகை.
Gallic
-1 n. மரவகைக்காழ் சார்ந்த, ஒட்டுயிர்பூச்சி வகையின் செயலால் மரவகையில் உண்டான கரணையிலிருந்து எடுக்கப் பட்ட.
Gallic
-2 a. கால்ஸ் என்ற பண்டைப் பிரஞ்சு நாட்டுப் பழங்குடி மக்களினத்தைச் சார்ந்த, பிரஞ்சு நாட்டுக்கு உரிய.
Gallican
n. போப்பாண்டவருக்கு முற்றிலும் கட்டுப்படாஉரிமைகோரிய பிரஞ்சு ரோமன் கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கிளை இயக்கத்தின் சார்பாளர், (பெ.) பிரான்சின் பண்டைத்திருக்கோயிலைச் சார்ந்த.
Gallice
adv. பிரஞ்சு மொழியில்.
Galligaskins
n. pl. காற்சட்டை.
Gallimaufry
n. கூலக்கலவை.
Gallinazo
n. அமெரிக்க வல்லுறு வகை, துருக்கிநாட்டு வேட்டைப்பருந்து.
Gallio
n. அத்துமீறிக் தலையிட மறுக்கும் பணியாளர், பொறுப்பேற்க விழையாத கவலையில்லா மனிதர்.
Galliot
n. ஆலந்து நாட்டின் சரக்குப்படகு, ஆலந்து நாட்டின் மீன் கலம், சிறு சிறைக்கப்பல்.
Gallipoli
n. தேவதாரு எண்ணெய்.
Gallipot
n. சாடிவகை, தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட்பாண்டம்.
Gallium
n. மென்மையான நீலஞ்சார்ந்த வெண்ணிற உரோகவகை.