English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nutriment
n. ஊட்ட உணவு, சத்துணவு.
Nutrition
n. உணவூட்டம், ஊட்ட வளம், சத்துள்ள உணவு.
Nutritional
a. உணவு ஊட்டத்துக்குரிய.
Nutritious
a. ஊட்டம் தரத்தக்க, ஊட்டமிக்க.
Nutritive
n. உணவு வகை, ஊட்டந்தரும் உணவு, (பெ.) உணவாகப் பயன்படுகிற, ஊட்டச் சத்துடைய.
Nuts
n.pl. நிலக்கரிக் கட்டிகள், நிலக்கரித் துண்டுகள்.
Nutshell
n. கொட்டை ஓடு, சிறு கொள்கலம், சிறு குடில், மணிச்சுருக்கம், செறி சுருக்கம்.
Nut-tree
n. கொட்டைகள் ஈனும் மரவகை.
Nutty
a. கொட்டைகள் நிறைந்த, கொட்டைப்பருப்புப் போன்ற சுவையுடைய.
Nut-weevil
n. பச்சைக் கொட்டைவகைமீது முட்டையிடம் வண்டுவகை.
Nux vomica
n. எட்டிக்காய்.
Nuzzle
v. மூக்கினை அழுத்து, மூக்கால் அழுத்து, மூக்கால் இடி, மூக்கால் தேய், மூக்கால் கிளறு, மோப்பம் பிடி, ஒன்றி அணைத்துக்கிட, நெருக்கிக்கிட, வாய்ப்பாக அமர்ந்து கொள்.
Nyctalopia
n. இரவுக் குருடு, மாலைக்கண், இருட்டில் மட்டும் தௌதவாகப் பார்வையுடைய.
Nylghau
n. குறுக்கொம்புடைய இந்திய மான்வகை.
Nylon
n. தொய்வும் திண்மையும் மிக்க கண்ணாடிபோன்ற செயற்கைத் துகில் வகை.
Nylons
n.pl. மகளிர் காலுறை, மகளிர் ஆடைகள்.
Nymph
n. கொல்லிப்பாவை, அரமகள், நீர்நங்கை, வன தெய்வம். எழில் மடமாது, முட்டைப்புழுவின் கூடு.
Nympholepsy
n. கிட்டாதவற்றின்மேற் கொள்ளும் ஆசையால் ஏற்படும் வெறித்துடிப்பு.