English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Magdalenian
a. (தொல்) பிரஞ்சு நாட்டில் உள்ள 'லாமாடிலீன்' என்னுமிடத்திற் காணப்படும் படிவங்கள் காட்டுங் கற்காலஞ் சார்ந்த.
Mage
n. மாயாவி, அறிவர், புலவர், மேதை.
Magenta
n. ஒண் சிவப்புச்சாயம், (பெயரடை) சிவப்புச்சாயந்தீட்டப்பட்ட, ஒண் சிவப்புச்சாயம் போன்ற.
Maggot
n. சில பூச்சிகளின் முட்டைப்புழு, நிலையற்ற வேடிக்கைக் கற்பனை.
Magi
n. pl. பண்டைப் பாரசிகப் புரோகித வகுப்பினர், சூனியக்காரர், மாயாவி, அறிவர்.
Magian
n. பண்டைய பெர்சிய குருமார்களில் ஒருவர், மந்திரக்காரர், (பெயரடை) பண்டைப் பெர்சிய குருமார் சார்ந்த.
Magic
n. மாயவித்தை, மந்திரம், விளத்தகு விளைவுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல், (பெயரடை) மாயவித்தைசார்ந்த, மந்திரம் போன்ற, வியத்தக், விளக்கமுடியாத, புதிர்விளைவுகளை உடைய.
Magician
n. மாயக்காரன், மந்திரவாதி.
Maginot line
n. செர்மனி எல்லையிலுள்ள பிரஞ்சு அரண் வரிசை.
Magisterial
a. குற்றவியல் நடுவர் சார்ந்த, குற்ற வழக்கு நடுவரால் நடத்தப்பட்ட, குற்றவியல் நீதிபற்றிய, தண்ட நடுவர் அதிகாரம் உடைய, மேலாண்மைத்தனமான, கருத்துக்கள் வகையில் அதிகாரம் அமைந்த.
Magistrate
n. குற்றவியல் நடுவர், அமைதி காப்பு நடுவர், தண்டலாளர்.
Maglemosian
a. மென்மார்க்கில் காண்ப்படும் தடங்களக்குரிய தொடக்ககால ஐரோப்பிய நாகரிகஞ் சார்ந்த.
Magma
n. (மண்) கற்குழம்பு.
Magna Cara, Magna Chart
a. (வர) பேருரிமைப் பத்திரம், பிரிட்டனில் ஜான் என்ற மன்னரிடமிருந்து 1215-இல் மக்கள் சார்பில் பெறப்பட்ட அரசியல் உரிமைப்பத்திரம்.
Magnalium
n. அலுமினியமும் வௌதமமும் கொண்ட இலேசான வன்கலவை.
Magnanimity
n. பெருந்தகைமை, பெருந்தன்மை, பெருமித மனப்பாங்கு.
Magnanimous
a. பெருங்குணமுள்ள, குறுகிய சிற்றுணர்ச்சிகளைக் கடந்த.
Magnate
n. பெரிய மனிதர், மேம்பாடுடையவர், சிறப்புடையவர், பெருஞ் செல்வர்.
Magnesia
n. வௌதம உயிரகை, (பே-வ) வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெண்பொடி,. நீரூட்டப்பட்ட வௌதமக்கரியகி.
Magnesium
n. வௌதமம், உலோகத்தனிம வகை.