English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Paillasse
n. வைக்கோல் பையுறை, வைக்கோல் மெத்தை.
Paillette
n. மினுக்கத் துணுக்கு, மெருகுச் சாயத்தில் பயன்படும் பளபளப்பான உலோகத்துகள்.
Pain
n. நோவு, வேதனை, மனத்துன்பம், மனத்துயர், (வினை.) நோவு உண்டுபண்ணு, துன்புறுத்து, நோவுகொள், துன்புறு.
Pained
a. துன்புற்ற, துயரார்ந்த, நோவுறுகிற, வருத்தங்கொள்கிற, கவலையார்ந்த.
Painful
a. நோவுதருகிற, துன்பந்தருகிற, துன்பம் நிறைந்த, வருந்தி உழைக்கவேண்டிய, கவலை எடுத்துக்கொள்ளவேண்டிய.
Painless
a. நோவற்ற, நோவுதராத, வருத்தந்தேவையற்ற.
Pains
n.pl. பிள்ளைப்பேற்று வேதனை, கடுமுயற்சி, மெய்வருத்தம்.
Paint
n. சாயம், முகப்பூச்சு வண்ணப்பொருள், (வினை.) வண்ணந்தீட்டு, ஓவியந்தீட்டு, அணிசெய், ஒப்பனை செய், உருவகப்படுத்திக் காட்டு, சொல்லோவியந் தீட்டு, சாயம்பூசு, வண்ணந் தோய்வி, முகத்துக்குச் சாயமிடு.
Painted
a. சாயம்பூசிய, அணி செய்த.
Painter
-1 n. ஓவியர், சாயமிடுபவர்.
Painter
-2 n. படகைக் கப்பலுடன் பிணைக்குங் கயிறு.
Painting
n. ஓவியம், ஓவியக்கலை.
Paints
வண்ணெய்கம், வண்ணப்பூச்சு
Painty
a. சாயஞ் சார்ந்த, வண்ணமிகையுடைய.
Pair
n. இணை, இரண்டன்தொகுதி, சோடி, இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி, கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள், மணத்துணைவர், கணவன் மனைவியர், மணமாகிய, காதல்துணைவர், இணைகாதலர், ஒரு நுகத்துக்குதிரை இணை, சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர், இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர், இணைதுணைவோருள் ஒருவர், எதிரிணை, விலங்கிணை, ஒத்த இணை, ஈடுசோடு, ஒப்புடைய எதிரிணை, படிக்கட்டு இரட்டை, (வினை.) இணைவுறு, கதலில் இணை, திருமணத்தில் இணை, இணைவிழைச்சில் ஈடுபடு, எதிர்பாலாருடன் கூடி இணை, எதிர்பாலுடன் இணை, சோடியாக்கு, இணையிணையாக வகுத்தமை, சோடியாகு, இணையிணையாக அமை, எதிரிணையாயிரு, இணைகூடு, ஒகிணை, சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு.
Pair-horse
a. இரட்டைக் குதிரைகளுக்குரிய.
Pair-oar
n. இரட்டைத் தடுப்புப் படகு.
Pal
n. தோழர். நண்பர், துணைவர், (வினை.) இணைந்திரு தொடர்புகொள், கூட்டாளியாயிரு.
Palace
n. அரண்மனை, அரசமாளிகை, கிறித்தவசமயத்தலைவர் இருப்பிடம், அகல்மாட மாளிகை, இன்பமாளிகை, கேளிக்கை விருந்தூட்டுமனை.
Paladin
n. பழங்கால பிரஞ்சு நாட்டு மன்னன் சார்லிமேன் அரசவைப் பெருமக்கள் பன்னிருவருள் ஒருவர், அருஞ்செயல்வீரன், வீரத்திருவாளன்.