English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Labrador dog, Labrador retriever
n. காயம்பட்ட அல்லது இறந்த வேட்டை உயிரினங்களின் உடலை மீட்டுத்தருவிக்கப் பழக்கப்படுத்தப்பட்ட நாய்வகை.
Labret
n. அழகுக்காக உதட்டில் செருகிக் கொள்ளப்படுஞ்சிறு கிளிஞ்சல் அல்லது எலும்பு.
Laburnum
n. ஔதமிக்க மஞ்சள்நிற மலர்க்கொத்துக்களைக் கொண்ட சிறு மரவகை.
Labyrinth
n. அரும்புதிர் நெறி, மீட்டுவரமுடியாதபடி திருக்குமறுக்காக அமைக்கப்பட்ட வழி, புதிர்நெறிக்கூடம், அரும்புதிர் நெறிகள் அமைந்த கட்டிடம், திகைப்பூட்டுந்திருக்கு மறுக்குப் புதிர், கடுஞ் சிக்கலமைவு, உட்காதின் திருக்குமறுக்கான துளை, திகைப்பூட்டுஞ் சிக்கல் நிலை.
Labyrinthodon, labyrinthodont
n. திருக்குமறுக்காக வளைந்து வளைந்துள்ள பல்லமைப்புடைய நில நீர்வாழ் பேருருவப் புதையுயிர்ப் படிவ விலங்கு வகை.
Lac
-1 n. அரக்கு, சில பூச்சிகளால் தற்காப்புக்காகச் சுரப்பிக்கப் படும் பிசின்போன்ற பொருள்.
Lac
-2 n. (இ.) நுறாயிரம், இலட்சம்.
Lace
n. வார் இழை, புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை, இழைவார், ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை, பூத்தையல் இழை, சரிகை, பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு, (வினை) வாரிழைகோத்திறுக்கு, இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு, இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு, இடுப்பை வரிந்திறுக்கு, சரிகையால் பின்னு, சரிகை ஒப்பனை செய், இழைக்கச்சையால் பின்னு, பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு, பின்னிமுறுக்கு, பல்சுவை கல, சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு, கெடாமல் வை, கசைவாரினால் அடி.
Lace-glass
n. சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு.
Lace-pillow
n. சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு.
Lacerate
v. கிழி, கீறு, கிழித்துப் புண்படுத்து, சிராய்த்துக் காயப்படுத்து, உள்ளத்தைப் புண்படுத்து, மனவருத்தம் உண்டுபண்ணு.
Lacertian, lacertine
பல்லிகளைச் சார்ந்த, பல்லி போன்ற.
Lacet
n. சரிகை இழைகளிட்டு நாடா அல்லது வாரிழைகளாற் செய்யப்படுஞ் சித்திரவேலை.
Laches
n. (சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு, மடிமைக்குற்றம், சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு, உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம், உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம்.
Lachryma Christi
n. தென் இத்தாலியிற் செய்யப்படும் ஆற்றல்மிக்க இனிய செந்தேறல் வகை.
Lachrymal
n. கண்ணீர்க்கலம், (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீராலான, கண்ணீருக்கான.
Lachrymals
n. கண்ணீர் தொடர்புடைய உறுப்புக்கள், கண்ணீர்ச்சுரப்பி-கண்ணீர்க்கால் முதலியவற்றின் தொகுதி.
Lachrymation
n. கண்ணீர் ஒழுக்கு.
Lachrymatory
n. பண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி, (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீர் வருவிக்கிற.
Lachrymose
a. கண்ணீர் நிறைந்த, கண்ணீர் வடிக்கிற, அழுகிற இயல்புடைய.