English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lacianic
a. லுசியன் என்னும் கிரேக்க எழுத்தாளர் பாணியச் சார்ந்த, ஏளனம் கலந்த நகைத்திறமுடைய.
Laciniate, laciniated
a. (தவா., வில.) தாறுமாறாக உள்ளாழ்ந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட, ஓரத்தில் ஒடுங்கிய அலகுக்காக அமைந்த, கீற்றுகீற்றான.
Lack
n. குறைபாடு, பற்றாக்குறை, (வினை) இன்றியமையாது தேவைப்படு, இல்லாது குறைபடு, இலம்பாடுறு, இல்லாமலிரு, பெறாமலிரு.
Lackadaisical
a. சோர்வுற்ற, வருந்துந் தோற்றமுள்ள, மென்னயத் தளர்ச்சிப் பகட்டுடைய, ஒயிலான உணர்ச்சிப் பகட்டுடைய.
Lackey
n. குற்றேவலன், பணியாள், பணித்துறைப்பட்டி அணிந்த வேலையாள், கெஞ்சிப் பசப்புபவன், பிறரை ஒட்டி வாழ்பவர், ஒட்டுயிர் போன்று விடாது பற்றிநிற்பவர், (வினை) குற்றேவலனாயிரு, பணியாளாயிரு, கீழ்த்தரமான அடிமைக் குணத்தோடு நடந்துகொள்.
Lackland
n. நிலமில்லாதவர், நிலமற்றவர்.
Lacklustre
a. கண் வகையில் ஔதமங்கிய, மங்கலான.
Laconic
a. மணிச்சுருக்கமான, பொழிப்பான, பொருட்செறி வளர்ந்த, சூத்திரம்போல் திட்பநுட்பம் உடைய, மணிச்சுருக்கமாகப் பேசுகிற, விரைசுருக்கக் குறிப்புவாய்ந்த நடையுடைய.
Laconism
n. சுருங்கச்சொல்லும் பண்பு, மணிச்செறிவான நடைத்திறம், பொருட்செறிவுள்ள முதுமொழி.
Lacquer
n. பித்தளைமெருகு, பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய், அரக்குச்சாயம், மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய், மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு, (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு.
Lacrosse
n. வட அமெரிக்க வளைகோற்பந்தாட்ட வகை.
Lactation
n. பால்கொடுத்தல், பால்சுரப்பு.
Lacteal
a. பால்சார்ந்த, குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற.
Lacteals
n. pl. குடற் பாற்குழாய்கள், குடலில் அமைந்துள்ள நுட்பமான பாற்குழாய்கள்.
Lactescence
n. பால்போன்ற தோற்றம், பால்போன்ற சாறு சுரப்பித்தல்.
Lactescent
a. பால்போன்ற தோற்றமுடைய, பால்போன்ற சாறு சுரப்பித்தல்.
Lactic
a. (வேதி.) பால்சார்ந்த, பால்பற்றிய, பாலுக்குரிய.
Lactiferous
a. பால் சுரப்பிக்கிற, பால்போன்ற நீம்த்தை உண்டாக்குகிற.
Lacto-protein
n. பாலில் அமைந்துள்ள வெண் கருங்பொருள்.