English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lagoon, lagune
காயல், கடற்கழி, கடலினின்று மணல் திட்டுக்களால் பிர்க்கப்பட்ட ஏரிபோன்ற உப்புநீர்த் தேக்கம், மணித்தீவின் மையவட்டக் காயல்.
Laic
n. சமயத்துறை சாராதவர், பொது நிலையானவர், திருச்சபைச் சார்பற்றவர், (பெ.) சமயத்துறை சாராத, பொது நிலையான.
Laicize
v. சமயச்சார்பற்றதாக்கு, சமயச்சார்பற்றவர்களிடம் பள்ளிக்கூடம் முதலியவற்றை ஒப்படை, சமயச்சார்பற்றவர்களுக்குப் பதவி வாய்ப்பு முதலியன அளி.
Laid
-2 a. வைக்கப்பெறு, பதிக்கப்பெற்ற.
Laid(1), v. lay
என்பதன் இறந்கால முற்றெச்சம்.
Lain, v. lie
-2 என்பதன் முற்றெச்சம்.
Lair
n. குகை, வளை, பொந்து, அளை, காட்டு, விலங்குகள் தங்குமிடம், கால்நடை வழித்தங்கற்பட்டி, (வினை) குகையில் தங்கு, வழித்தங்கற் பட்டியில் அடை.
Laird
n. (செய்.) ஸ்காத்லாந்தில் நிலாக்கிழார், பெருமகன்.
Lais
n. கலைத்திறம் நிறைந்த அழகுமிக்க ஆடலணங்கு.
Laissez-aller
n. (பிர.) முழுக்கட்டுப்பாடற்ற தன்மை, தாராளமான சுதந்திரநிலை.
Laissez-faire
n. அரசியற் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாடு, தன்னிச்சை வாணிகக் கொள்கை.
Laity
n. சமயச்சார்பற்ற பொதுநிலைமக்கள், பணித்துறை சாராத பொதுநிலையினர், தனித்துறை சாராத பொதுத் திறத்தினர், தனித்துறை சாராப் பொது மைநிலை.
Lake
-1 n. ஏரி, கண்மாய், வானமாரிக்குளம்.
Lake
-2 n. அரக்கினால் முன்பு செய்யப்பட்டுவந்த வண்ணப் பொருள், சாயப்பொருளாலான வண்ணப்பொருள்.
Lakedweller
n. ஏரிப்படுகைமனை வாணர், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஏரிப்படுகை வீடுகளில் வாழ்ந்தவர்.
Lakeland
n. இங்கிலாந்தின் ஏரிமாவட்டங்கள்.
Lallation
n. ரகர லகரப் போலி, ரகர த்தை லகரமாக ஒலித்தல், குழந்தைத் தன்மைவாய்ந்த பேச்சு.
Lam
n. அடி, மொத்து, பிரம்பால் வன்மையாக அடி.
Lama
-1 n. திபேத் மங்கோலியா மாநிலங்களின் புத்தமத குரு.
Lamarckian
n. லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைப் பின்பற்றுபவர், (பெ.) லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைச் சார்ந்த.