English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Luxurious
a. உயர் இன்பவாழ்வுடைய, இன்பவாழ்வுக் குகந்த, ஒய்யாரமான, செழிப்பான, கட்டற்ற புலனுகர் வின்பஞ் சார்ந்த.
Luxury
n. உயர் இன்பவாழ்க்கை, இன்பவாழ்க்கைப் பொருள், அரும்பெறல் இன்பப்பொருள், உயர்விலைப்பொருள், கவலையற்ற இன்பப் பெருவாழ்வு, இன்றியமையக் கூடிய ஆனால் விரும்பத்தக்க பொருள்.
Lycanthropy
n. சூனியக்காரியின் ஓநாய் உருவேற்பு, தாம் விலங்காய்விட்டதாகக் கொண்ட மருட்சியால் நோயாளி விலங்கின் குரல்-உணவுப் பண்புகளை மேற்கொள்ளல்.
Lycee
n. (பிர.) பிரஞ்சு நாட்டில் அரசினர் நடத்தும் இடைநிலைப்பள்ளி.
Lyceum
n. அரிஸ்டாட்டில் தம் மாணவர்க்கு மெய்விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்த ஆதென்ஸ் நகரத்திலுள்ள தோட்டம், இலக்கியக் கழகம், சொற்பொழிவுக் கூடம், கற்பிக்கும் இடம்.
Lychnis
n. இளஞ்சிவப்பு, மலர்களையுடைய செடி இனம்.
Lycopod
n. (தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை,
Lyddite
n. ஆற்றல் மிக்க வெடிமருந்து வகை.
Lydian
n. மேலை ஆசியாவின் பண்டை நாடாகிய லிடியாவில் வழங்கிய மொழி, லிடியாவில் வாழ்ந்தவர், (பெ.) லிடியாநாட்டைச் சார்ந்த.
Lye
n. கடுங்கார நீர், ஆற்றல் வாய்ந்த கழுவுநீர்ம வகை, மாசுபோக்கி.
Lying
-1 n. படுத்திருத்தல், படுக்குமிடம்,ர (பெ.) படுத்திருக்கிற.
Lying
-2 n. பொய் பேசுதல், (பெ.) பொய் பேசுகிற, ஏமாற்றுகிற, பொய்யான.
Lying-in
n. மகப்பேறுற்ற நிலை.
Lyke-wake
n. இறந்தோர் உடலுக்கு இராக்காவல் விழிப்பு.
Lyme-grass
n. மணலின் புடைபெயர்ச்சியைத் தடுப்பதற்கும் பயிரிடும் புல்வகை.
Lymph
n. (செய்.) தூயநீர், (உட.) நிணநீர், புண் முதலியவற்றிலிருந்து கசியும், ஊனீர், ஆவின அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர், காப்புச் சீநீர் வகை.
Lymphatic
n. ஊனீர் நாளம், (பெ.) நிணநீர் சார்ந்த, சீநீர் சுரப்பிக்கிற, ஊனீர் கொண்டு செல்கிற, வாளைச்சதையுள்ள, வௌதறிய தோலுடைய, மந்தமான, சோம்பலான.
Lyncean
a. காட்டுப்பூனையின் கண் பார்வையுடைய, கூரிய பார்வையுள்ள.
Lynch
n. சட்டமுறைப்படா வழக்குமன்ற நடவடிக்கை, (வினை) சட்ட முறையின்றித் தான்தோன்றித்தனமான தீர்ப்பளி, தான் தோன்றித்தனமாகக் கொலைத்தண்டனை விதி.
Lynx
n. சிவிங்கி, குறுவாலுடைய பூனையின் விலங்குவகை.