English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lady-chair
n. காயமுற்றவர்கனைத் தூக்கிச் செல்வதற்கான இருவர் கையோப்புமைப்பு.
Lady-chapel
n. பெரிய திருக்கோயில்களிற் பலிபீடத்திற்குக் கிழக்காக அமைக்கப்பட்ட தூய கன்னிமரியாளின் திருவிடம்.
Lady-fern
n. உயர்ந்த மென்மையான சூரல்வகை.
Ladyfy
v. சீமாட்டியாக்கு, சீமாட்டியென அழை, பெருங்குடி மங்கை போன்று நடிப்பூட்டு.
Lady-in-waiting
n. அரண்மனை உவளகப் பாங்கி.
Lady-killer
n. பெண்களை மயக்கி வெற்றிகொள்ள விழைபவன்.
Ladylike
a. சீமாட்டியின் குணவியல்புகளுடைய, சீமாட்டிக்குத் தகுதியான, ஆண்மையில்லாது பெண்தன்மையுள்ள, ஆண்மையுற்ற.
Lady-love
v. உளமார் காதலி.
Ladyship
n. பெருமாட்டிநிலை, சீமாட்டித்தன்மை, பெரு மாட்டி பட்டம்,
Ladys-maid
n. பாங்கி, சீமாட்டியின்பணிப்பெண்.
Lady-smock, ladys-smock
n. புல்கரைச் செடிவகை.
Laevo-compound
n. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரியாக இடம்புரி திறமுள்ள சேர்மம்.
Laevogyrous, laevorotatory
a. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கமாக்குகிற.
Laevulose
n. (வ.) இடம்புரி வெல்லம், ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கப்படுத்துந் திறமுடைய பூத்தேனின் அல்லது பழத்தின் சத்தான சர்க்கரை.
Lag
-1 n. இயக்கப்பின்னடைவு, ஒழுக்கின் பின் தங்கல், தடங்கல் நிலை, சுணக்கம், தாமதம், ஒன்றனுக்கு மற்றொன்று பின தங்கிய அளவு, பின்கோடி, கடைக்கோடி, கடைக்கோடியான, தாமதமான, சுணங்கிய, (வினை) பின்னடை, பிந்து, பின்தங்கு.
Lag
-2 n. குற்றவாளி, கைதி, கடுங்காவல் தண்டனை ப்பருவம், நாடு கடத்திந் தண்டனைத்தவணை, (வினை) கடுங்காவல் தண்டனைஅளி, நாடுகடத்தத் தண்டனையளி, காவலிற் பற்று.
Lag
-3 n. கொதிகலத்தின் மின்கடத்தாத மூடியின் ஒருபகுதி, மின் கடத்தாத தமூ, உள்வரிச்சட்டம், மரப்பட்டிகை, வரிச்சல், குத்துக்கட்டை, (வினை) மின் கடத்தாத பகுதியுள்ள மூடியினாற் கொதிகலத்தை மூடு.
Lagan
n. (சட்.) கடலடியில் கிடக்குங் கப்பல் உடைவுப் பொருள்கள்.
Lager, lagerbeer
செர்மன் நாட்டுச் சிறுதிற இன்தேறல் வகை.