English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Laminar
a. தகட்டுக்குரிய.
Laminate
a. மென்தகட்டு வடிவான, மென்தகடுகளாலான, (வினை) உலோகத்தை மெல்லிய தகடாகும்படி அடி அல்லது சுருட்டு, அடுக்கு அல்லது தகடுகளாகும்படி விள, உலோகத் தகடுகளால் மேலே பரப்பு, அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்.
Lamination
பளிச்சீடு, பளபளப்பு, ஔதச்சுடர்
Lammas
n. ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள், அறுவடைத் திருநாள்.
Lammergeyer
n. தாடியுள்ள பெருங்கழுகு வகை.
Lamp
n. விளக்கு, தீபம், வளிவிளக்கு, கூண்டுவிளக்கு, மூடொளியலங்கம், கைப்பந்தம், வானொளிக்கோளம், கதிரவன், திங்கள், விண்மீன், அறிவொளி விளக்கம், ஆன்மிக ஔத, நம்பிக்கை ஔத, (வினை) ஔதவீசு, விளக்கேற்று, விளக்குகள் பொருத்து, ஔதவிளக்கஞ் செய்.
Lampas
-1 n. குதிரைவாயின் மேலண்ணத்தில் வீக்கம் உண்டு பண்ணும்ம நோய் வகை.
Lampas
-2 n. முன்பு சீனாவிலிருந்து வந்த பூப்போட்ட பட்டுத் துணி வகை.
Lampblack
n. புகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணப்பொருள்.
Lamp-chimney
n. கூண்டு விளக்கின் புகைபோக்கி.
Lampion
n. வண்ண ஔதயலங்கம், எண்ணெயும் திரியுங்கொண்ட விளக்கு வைக்கப்படும் வண்ணக் கண்ணாடிக்கலம்.
Lamplighter
n. தெருவிளக்கு ஏற்றபவர்.
Lampoon
n. கீழ்த்தர வசைப்பாடல், தாக்கு வசைப்பாட்டு, பொறுப்புடன் கூடிய நேரடி வசையுரை, (வினை) தாக்கு வசைப்பாட்டியற்று,. தாக்கி எழுது.
Lamppost
n. தெருவிளக்கத் தூண், விளக்குக்கம்பம்.
Lamprey
n. விலாங்கு மீன் போன்ற மீன்வகை.
Lancastrian
n. லங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன், (வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர், (பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
Lance
n. ஈட்டி, மீனெறிவேல், திமிங்கில வேட்டைக்குரிய வேல், (வினை) ஈட்டியினாற் குத்து, (செய்) எறி, தூக்கி வீசு, தூக்கி எறி, கடலில் வீசு, (மரு.) அறுவைச் சிறுகத்தியினால் குத்து, அறுத்துத் திற, ஈட்டியை ஊடுருவிச் செலுத்து.
Lancecorporal
n. படைத்துறைப் பணியாளர்களில் ஒருபடியினர், துணையாணை முகவர்.
Lance-fish
n. ஈட்டி போன்ற மீன்வகை.