English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Immure
v. சிறைப்படுத்த, அடைத்துவை.
Immutable
a. மாற்றமுடியாத, மாறாத, நிலையான,. மாறும் இயல்பற்ற.
Imp
-1 n. பேய்க்குட்டி, கூளி, குறளி, குறம்புத்தனமுள்ள குழந்தை, குழந்தை.
Imp
-2 v. வேட்டைப்பருந்தின் சிறகுகளில் ஒட்டுச்சேர், ஒட்டுச் சேர்த்து வலுப்படுத்து.
Impact
-1 n. மோதுதல், தாக்குதல், அடியின்வேகம் தாக்குதல் விளைவு, விசைப்பயன், விசைவலு, பயன், செயல் விளைவு.
Impact
-2 v. அழுத்தமாகப்பதியவை, வலிவாக ஊன்றவை, நெருக்கு, இறுக்கிப்பிணை.
Impair
v. அழி, பதங்கெடு, சேதப்படுத்து, ஊறுபடுத்து, பழுதாக்கு, ஆற்றல் குறை.
Impale
v. கழுவேற்று, கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய், செருகிவை, குத்திவை, கழிகளால் வேலியமை, வரம்புகட்டு., அடைத்துவை, (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை.
Impalpable
a. தொட்டு உணரமுடியாத, மிகமெல்லிய, நுண்ணியலான, மனத்தாற் பற்ற முடியாத, உணரமுடியாத, புதிரான.
Impaludism
n. சதுப்புநில வாழ்நரிடையே காணப்பெறும் இடையிடையிட்ட மண்ணீரல் அழற்சியும் காய்ச்சலும் வாய்ந்த பிணிவகை.
Impanate
a. இயேசுநாதரின் திருவுடல் வகையில் திருநேர்வு பெற்ற திருவுணா அப்பத்திலடங்கிய.
Impanation
n. திருநேர்வு பெற்ற திருவுணா அப்ப வகையில் இயேசுநாதரின் திருமேனி உளப்பாட்டடக்கம்.
Imparadise
v. பொன்னுலகாக்கு, பொன்னுலக மயமாக்கு, பேரின்ப நிலைக்கக்கொணர், பேரின்பமளி, கழிமகிழ்வூட்டு.
Imparisyllabic
n. பண்டைக்கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக் கொண்ட பெயர்ச்சொல், (பெயரடை) பண்டைக் கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் பெயர்ச்சொல் வகையில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக்கொண்ட.
Impark
v. விலங்குகளைத்தோட்டத்தில் அடை, பூங்காவிற்காக நிலத்தைச் சுற்றி வேலியடை.
Impart
v. பங்களி, செய்திகூற, தெரிவி.
Impartial
a. நடுநிலை தவறாத, ஒருதலை சாயாத, தப்பெண்ணமற்ற, நடுநேர்மை வாய்ந்த.
Impartible
a. பிரிக்கமுடியாத, பங்கிடத்தகாத.
Impassable
a. கடந்துசெல்ல முடியாத.
Impasse
n. முட்டுச்சந்து, தப்பிக்க முடியாதநிலை.