English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Impassible
a. உணர்ச்சித்திறக் குறைவான, கிளர்ச்சியற்ற, துன்பமுணராதம, ஆமுரமைதியுடைய, அசைக்க முடியாத வீறமைதி வாய்ந்த.
Impassion
v. உணர்ச்சியூட்டு, உணர்ச்சி கிளர்ந்தெழச்செய், முனைப்பான தூண்டுதலளி.
Impassive
a. உணர்ச்சித்திறக் குறைவான, கிளர்ச்சியற்ற, துன்பமுணராத, ஆரமைதியுடைய, அசைக்க முடியாத வீறமைதி வோய்ந்த.
Impast
v. பசைப்பொருளில் பொதி, பசைபோன்ற பொருளில் பதித்துவை, பசைக்களிம்பாக்கு, வண்ணச்சாயங்களை அப்பிச் சயாம் தீட்டு.
Impasto
n. திண்சாயப்பூச்சு, கெட்டியாக வண்ணச்சாயம் அப்பிய நிலை.
Impatience
n. பொறுமையின்மை, பொறுமையற்ற விரைவு, அமைவின்மை, படபடப்பு, சகிப்பின்மை.
Impatient
a. பொறுமையற்ற, பதற்றமான, மன அமைதியற்ற, சகிகப்புத்தன்மையற்ற, ஆத்திரமான, அமைதியற்ற தன்மையில் ஆர்வமுற்ற.
Impawn
v. அடகுவை, ஈடாகவை, உறுதிக்காப்பாக அளி,.
Impayable
a. விலைமதிப்பற்ற.
Impeach
v. உச்சஉயர் பேரவை மன்றத்தில் நிறுத்தி அரசுப்பகைமைக் குற்றஞ்சமாட்டு, பேரவைப்பொதுமன்றத்தின் சார்பாக உயர்மன்றத்தில் அரசயில் உயர்பணியாளர்மீது குற்றஞ் சாட்டு, மன்றச்சான்றாகி உடன்குற்றவாளி மீது குற்றம தாக்கு, குறைகாண், இழித்துரை, மதிப்புக்குறைப்படுத்து.
Impeachable
a. குற்றத்துக்கிடமான, குறைகாணத்தக்க.
Impeachment
n. மன்பகைக் குற்றச்சாட்டு, அரசியல் குற்றச்சாட்டு, பழிப்பெதிர்ப்பு, குற்றத்தாக்குதல்.
Impeccable
a. பழிக்கிடந்தராத, மாசற்ற, குற்றமில்லாத, குறையற்ற.
Impecunious
a. கையில் பணமில்லாத, பணமுடைப்பட்ட.
Impedance, nl.
(மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை.
Impede
v. தடைசெய், முட்டுக்கட்டையிடு, தாமத்ப்படுத்து.
Impediment
n. தடை, இடர்ப்பாடு, குறை.
Impel
v. உந்துவி, முன்னேறச்செய், தூண்டு, இயக்கு, செலுத்து, ஓட்டு, கட்டாயப்படுத்திச் செய்வி.
Impend
v. தொங்கு, ஊசலாடு, அச்சுறுத்தும் நிலையில் இரு, எக்கணமும் நிகழஇரு, வரஇரு, நடைபெற இரு.
Impenetrable
a. ஊடுருவிச்செல்ல இடந்தராத, துளைக்க முடியாத, அறிய முடியாத, ஆழங்காண முடியாத., கருத்தேற்கும் இயல்பற்ற, முட்டாளான, (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.