English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Immigration
n. குடியேறுதல்.
Imminence
n. அண்மையில் நிழப்போகிற நிலை, உடனடியாக நேரவிருக்கும் இடர்.
Imminent
a. நெருங்கி வர இருக்கிற, அண்மையில் நிகழப்போகிற, உடனடியாக நிகழக்கூடிய, வருவதாக அச்சுறுத்துகிற.
Immiscible
a. கலக்க முடியாத, கலப்பதற்கு இடந்தராத.
Immitigable
a. தணிக்க முடியாத, அமைக்க இயலாத, மட்டுப்படுத்த இயலாத.
Immixture
n. கூட்டுக்கலப்பு, சிக்குறவு.
Immobile
a. இயங்காத, அசைவற்ற, நகர்த்த முடியாத.
Immobilize
v. அசைக்கமுடியாதபடி பொருத்து, படைகள் ஊர்திகள் வகையில் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்க்கமுடியாதபடி செய், செலாவணியிலிருந்து நாணயத்தைத் தடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்.
Immoderate
a. முனைப்பான, நடுநிலை இகந்த, மட்டுமீறிய, எல்லை கடந்த, கட்டுக்கடங்காத, அளவுமீறிச் செலவுசெய்கிற, ஊதாரிப்த்தனமான.
Immodest
a. அடக்கமற்ற, நடைநயமற்ற, துடுக்கான, நடைமுனைப்பான, வெட்கமில்லாத, வரம்புமீறிய மதிப்புக்கேடான.
Immolate
v. பலியாக்கு, பலியாக ஒப்படை, பலியாகக் கொல்லு, மற்றொருவருக்காக நலங்களைத் துற, தியாகம் செய்.
Immoral
a. ஒழுக்கமற்ற, நெறியற்ற, நன்னெறிக்குப் புறம்பான, ஒழுக்கக்கேடான, கொடிய, நெறிகெட்ட, தீயொழுக்கமுள்ள.
Immortal
n. இறவாதவர், தேவர், இறவாப்புகழுடையவர், புகழ் நிலைபெற்ற இலக்கிய எழுத்தார், பிரஞ்சுக்கலை இலக்கியக்கழக உறுபபினர், (பெயரடை) இறப்பற்ற, இறவாமையுற்ற தெய்விகமான, அழியாத, என்றும் புகழ் பெற்றுள்ள,. நிலைபேறான.
Immortalize
v. இறவாநிலை வழங்கு, அழியாப்புகழை அளிங நிலைபேறான வாழ்வளி, நீடித்து நிலைத்திருக்கச்செய்.
Immortals
n. pl. பண்டைக்கிரேக்கரின் தேவர்கள், தெய்வங்கள், பண்டைக்காலப் பாரசீக அரசரின் மெய்காப்பாளர் குழு.
Immortelle
n. உலர்ந்தபின்பும் நிலையான வண்ணமுடன் கல்லறைகளை அழுகுபடுததும் தாள் போன்ற மலர்க்கொத்து வகை.
Immovables
n. pl. நிலை உடைமைகள், புடைபெயர்க்க முடியாத செல்வக்கூறுகள், தாவர சொத்துக்கள்.
Immune
n. பிணிகளினின்று முழுநிறை தடைகாப்புப் பெற்றவர், (பெயரடை) நஞ்சு தொற்றுநோய் முதலியவற்றினின்றும் விடுபாடு உடைய, தடைகாப்புறுதி பெற்ற.
Immunity
n. (சட்) காப்புடிவமை, (சட்) விடுபாட்டுரிமை, (மரு) தடைகாப்புநிலை.
Immunize
v. தொற்றுநோய்களினின்று தடைகாப்பு அளி.