English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gunrunner
n. சார்புநாட்டில் சட்டத்தை மீறி வெடிபடைக்கலங்களைக் கொண்டு செல்பவர்.
Gun-running
n. சார்புநாட்டில் சட்டத்தை மீறி வெடிபடைக்கலங்களைக் கொண்டு செல்லுதல்.
Gunshot
n. துப்பாக்கிக் குண்டு பாயுந்தூரம், (பெ.)துப்பாக்கிக் குண்டு தாக்கியதால் விளைந்த.
Gun-shy
a. துப்பாக்கி வேட்டுக்களினால் அச்சங்கொள்கிற.
Gunsmith
n. துப்பாக்கி செய்பவர், துப்பாக்கி செப்பனிடுபவர்.
Gunstick
n. துப்பாக்கியில் மருந்து திணிக்க உதவுங் கோல்.
Gunstock
n. பீரங்கிக்குழல் ஏற்றப்பெறுவதற்குரிய மரச்சட்டம்.
Gunter
n. இரண்டடி நீளமுள்ள மரத்தினாலாய தட்டைஅளவு கோல் வகை. கப்பலின் உச்சிப்பாய்மரம், கப்பலின் உச்சிப்பாய்மரத்துணி.
Gunwale
n. கப்பலினது அல்லது படகினது பக்கத்தின் மேல்விளிம்பு.
Gunyah
n. ஆஸ்திரேலிய நாட்டுக் குடிசை.
Gurar-boat
n. துறைமுகத்தில் காவல் வேலைக்கென விடப்பட்ட படகு.
Gurgitation
n. அலையெழுச்சி, குமிழியிட்டுக் கொந்தளித்தல், குமிழியிட்டுக் கொந்தளிக்கும் ஒலி.
Gurgle
n. கள கள வென்னும் நீர்பாயுமொலி, (வினை) களகள என நீர்பாயும் ஒலியெழுப்பு.
Gurjun
n. குட்ட நோய் களிம்பு தைலம் தரும் கிழக்கிந்திய மர வகை.
Gurnard, gurnet
கடல்மீன் வகை, பெரிய தலையும் கவசக்காப்புடைய மூன்று கை போன்ற உறுப்புக்களும் செவுள்களும் கொண்ட கடல்மீன் வகை.
Gurry
n. (இ.) சிறிய கோட்டை.
Guru
n. (ச.) குரு, ஞான ஆசிரியர்.
Gush
n. பொங்கி வழியும் நீர்த்தாரை, உணர்ச்சியின் எழுச்சி, கிளர்ந்தெழும் கனிவு, பேச்சுநடையில் உணர்ச்சி வளம், (வினை) பொங்கிவழி, பீறிட்டு ஒழுகு, கொப்புளி, பீறிட்டு ஒழுகும் படி செய், தேனொழுகப் பேசு., இனியது கூறு. அன்பு தவம்பும் படி பேசு.