English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gulosity
n. பேரூண், கழிபேர் இரை.
Gulp
n. பேராவலோடு விழுங்குதல், விழுங்க முயலுதல், பெருங்கவனம், (வினை) அவசரமாக விழுங்கு, பேராவலோடு உண், பெருமுயற்சி செய்து உட்கொள், இடர்ப்பட்டு விழுங்கு.
Gum
n. மரப்பிசின், கோந்து, கண்பீளை, இனிப்புத் தின்பண்டம் செய்ய உதவும் பொருபொருப்பான கடும் பிசின்பொருள், அதுக்குவதற்குரிய சவ்வுப்பண்டம், பிசின் வௌதப்படுத்தும் மரவகை, நோய்ப்பட்ட பழமர வகைகளிலிருந்து கசியும் பிசின், (வினை) பிசின் தடவு, பசை தடவி விறைப்பாக்கு, பசை தடவி ஒட்டு, பசைப்பொருளாகு, பிசின் கசிய விடு.
Gumammoniac, gumammoniacum
n. குங்கிலியப் பிசின்.
Gum-arabic
n. வேலம் பிசின்.
Gumboil
n. பல் ஈறுகளில் தோன்றும் சிறு கட்டி.
Gum-dragon
n. முட்புதர்ச்செடிப் பிசின், முட்புதர்ச்செடி வகை.
Gumjuniper
n. பெருகெண்ணெய் செய்வதற்குப் பயன்படும் குங்கிலியப் பிசின் வகை.
Gumjuniper
n. (இ.) நீர் வைப்பதற்கான பெரிய மண்சாடி வகை.
Gumma
n. (மரு.) மேகக்கட்டி, பிசின் போன்ற செறிவுள்ள புடைப்பு.
Gummatous, gummiferous
a. பிசின் உண்டாக்குகிற.
Gumming
n. பிசின் கொண்டு ஒட்டுதல், கல் அச்சு முறை வகையில் கல்லின் மேல் பிசின் நீர் தடவுதல், செடிகளுக்குக் காணும் நோய்க்கூறு வகையில் உயிர்மச் சுவர்கள் பிசினாக மாறுதல்.
Gummosity
n. பிசின் போன்ற நிலை.
Gummous, gummy
பிசுக்குள்ள, களியான, ஒட்டிக்கொள்ளுகிற, பிசின் மிகுந்துள்ள, பிசின் கசிகிற, கால்கணைக்கால் வீக்கங் கண்டுள்ள.
Gumption
n. (பே-வ.) செயல்துறை அறிவு, அறிவுக்கூர்மை, அறிவுவன்மை, ஊக்கவளம், விரைசெயல் திறம், வண்ணக்கலப்புக் கலை, படம் எழுதுதற்கான வண்ணப்பொருள்களை ஆயத்தப்படுத்தும் துறை.
Gum-rash
n. (மரு.) எயிற்றுப்புஐ.
Gum-resin
n. பிசின் கலந்த குங்கிலியம்.
Gums
n.pl. எயிறு, பல்நிற்கும் தசை.
Gum-tree
n. பிசின்-குங்கிலிய மரவகை.
Gun
n..துப்பாக்கி, சுழல்துப்பாக்கி, பீரங்கி விசைப்பீற்று கருவி, பூச்சிகளைக் கொல்வதற்காகத் தூவப்படும் மருந்து, துப்பாக்கி வேட்டு அடையாளம், துப்பாக்கி தாங்கிச் செல்பவர், துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்பவர்களில் ஒருவர், (வினை) வேட்டிடு, குறிபார்த்துச்சுடு, துப்பாக்கிகளைத் தருவித்துக்கொடு, வெடிநீர், துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்.