English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Guipure
n. (பிர.) சித்திரப் பின்னல் கரை வகை, கயிறு அல்லது கம்பி ஊடே செலுத்தப்பெற்றுள்ள பட்டு-கம்பளி அல்லது பருத்தி நுலிழை வகை.
Guise
n. உடுக்கும் பாணி, உடை, புறத்தோற்றம், கோலம், மேற்கொண்ட தோற்றம், புனையுரு, வேடம், பாவனை, புனைவு.
Guiser
n. கிறிஸ்துமஸ் விழாமவில் மாறுவேடம் பூண்டு ஊமையாட்டம் ஆடுபவர், மாறுவேடம் புனைந்தவர்.
Guitar
n. யாழ்வகை, ஆறு நரம்மபுள்ள இசைக்கருவி வகை, (வினை) ஆறு நரம்புள்ள நரப்பிசைக் கருவி வகை வாசி.
Gulden
n. ஆலந்து ஆஸ்ட்ரியா-அங்கேரி நாடுகளில் வழங்கம் வௌளி நாணய வகை.
Gules
n. (கட்.) சிவப்பு நிறம், (பெ.) சிவப்பு நிறமான.
Gulf
n. (நில.) வளைகுடா, ஆழ்கடற்கயம், ஆழ்கயம், படுகுழி, ஆழ்கெவி, பாதாளப்பள்ளம், நீர்ச்சுழல், நிரம்பாநெடுநீள் பள்ளம், பெரும் பிளவு, கடக்க முடியா இடைப்பள்ளம், பல்கலைக்கழகச் சிறப்புத் தேர்வில் தவறிப் பொதுத்தேர்வுப்படம் பெறுபவர் நிலை, (வினை) வளைந்து சூழ், கவிந்து உட்கொள், விழுங்கு, பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்டத்தேர்வு எழுதிக் தவறியபின் பொதுநிலைத் தேர்ச்சிப் பட்டம் பெறும்நிலை அளி.
Gulf-stream
n. மெக்சிகோ வளைகுடாவினின்றும் வௌதப்பட்டுச் செல்லும் வெப்பக் கடல்நீரோட்டம்.
Gulfweed
n. கிளைவிட்டு வளரும் கடற் களைப்பூண்டு வகை.
Gulfy
a. வளடாக்கள் அல்லது நீர்ச்சுழைகள் நிறைந்துள்ள.
Gull
-1 n. நீள் நிறகும் தேமாரடியும் உடைய கடற்பறவை வகை.
Gull
-2 n. ஏமாளி, பேதை, மோசடி, (வினை) மயக்கி ஏய், ஏமாற்று.
Gullet
n. உணவுக்குழாய், இரைக்குழல், தொண்டை, மிடறு, நீர்க்கால், கடல் இடுக்கு, இடுமுடுக்கு, ஒடுக்கமான வழி.
Gullible
a. எளிதில் ஏமாற்றப்படும் இயல்புள்ள.
Gully
-1 n. நீர் அரித்தோடிய மலை இடுக்கு, ஆழமான செயற்கை நீர்க்கால், சாக்கடை, வடிகால், சால்வரி, சால்வரியிட்ட இருப்புப் பாதை, மரப்பந்தாட்ட வகையில் மட்டையாளருக்குப் பின்னால் பக்கவாட்டத்திலுள்ள ஆட்டக்களம், (வினை) சால்வரி இடு, அரித்தகழ்ந்து நீண்ட இடுக்கப்பள்ள வழி உண்
Gully
-2 n. பெரிய கத்தி வகை.
Gully-drain
n. வடிகால், சாக்கடைக்கால்.
Gully-hole
n. தெருப்பக்கச் சாக்கடைத் தொட்டி.
Gully-trap
n. சாக்கடை வளியடைப்பு அமைவு.