English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ultramicroscope
n. புடையொளி நுண்ணோக்காடி.
Ultramicroscopic
a. உறுமிகு நுட்பமான, நுண்ணோக்காடி கொண்டுங் காணமுடியாத அளவில் மிகச் சிறிதான.
Ultramontane
n. ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கில் வாழ்பவர், இத்தாலி நாட்டவர், போப்பின் மீயுரிமைக் கோட்பாட்டாளர், போப்பாண்டவருக்கே சமயப் பேராணை உரிமை உண்டு என்னுங் கொள்கையாளர், (பெ.) ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கே அமைந்த, இத்தாலி நாட்டினைச் சார்ந்த, போப்பின் மீயுரிமைக் கோட்பாடு சார்ந்த, சமயத்துறையில் போப்பாண்டவர்க்கே பேராணையுரிமை உண்டு என்னுங் கோட்பாட்டிணையுடைய.
Ultramontanism
n. போப்பாண்டவரின் மீயுரிமைக் கோட்பாட்டாதரவு.
Ultrasonic
a. ஒலியலை வகையில் செவிப்புலங்கடந்த, கேட்கப்படாத, வேக வகையில் ஒலிவிசை கடந்த, விமான வகையில் ஒலி கடந்த விசையில் செல்லத்தக்க.
Ultrasonics
n. கதழ்ஒலியலை அதிர்வாய்வுத்துறை.
Ultra-violet
a. அப்பாலுதா நிறமான, கட்புலனாகா நிறப்பட்டையின் ஏழு நிறங்களில் ஊதாக் கதிர்களுக்கு அப்பாலான.
Ultravires
adv. தன்னுரிமைக்கு அப்பாற்பட்ட நிலையில், அதிகாரத்திற்கு மேற்பட.
Ululant
a. அலறுகிற, ஊளையிடுகிற.
Ululate
v. அலறு, கதறு, ஊளையிடு.
Ululation
n. அலறல், ஊளையிடல்.
Umbel
n. (தாவ.) குடைப்பூங்ககொத்து, குடைவடிவ உருள் கொத்தான பூக்குலைத் தொகுதி.
Umbelliferous
a. குடைப்பூங்கொத்துக்கள் தாங்கிய, குடைப்பூங்கொத்துக்களையுடைய, சிவப்பு முள்ளங்கியினஞ் சார்ந்த.
Umbelliform
a. குடைப்பூங்கொத்து வடிவான.
Umber
n. பழுப்புச் செங்காவி, மீன்வகை, நாரையின ஆப்பிரிக்க பறவை வகை, (பெ.) செங்காவி நிறமான, பழுப்புக்காவி நிறமான,(வினை.) செங்காவி நிறந் தோய்வி, பழுப்புக்காவி நிறஞ் தோய்வி.
Umber-bird
n. நாரையின ஆப்பிரிக்க பறவை வகை.
Umbery
a. செங்காவி நிறமான.
Umbilical
a. கொப்பூழ் சார்ந்த, நடுவிடுஞ் சார்ந்த, மரபுவகையில் பெண்வழித் தொடர்புடைய.
Umbilicate
a. உந்தி யுருவுடைய, கொப்பூழினையுடைய.
Umbilication
n. உந்திக்குழிவு, கொப்பூழ்க்குழி போன்ற குழி.