English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ugh
int. வெறுப்புக்குறிப்பு.
Ugliness
n. உட்கம், அருவருப்புத்தோற்றம்.
Ugly
n. அழகிலி, நுதல்வரித்தொங்கல், பெண்டிர் 1ஹீஆம் நுற்றாண்டிடையே அணிந்து வந்த மெல்வரித் தொப்பியின் ஔத மறைப்புத் தொங்கல் திரை, (பெ.) அருவருப்புத் தருகிற, அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க, விரும்பத்தகாத, அழகற்ற, அருவருப்பான, நடத்தையுடைய, தீமையென்ற ஐயுறவுக்கு இடந்தருகிற, தீய இயல்பு வாய்ந்த, நாணயக்கேடான, வெட்கக்கேடான, இழிந்த, அறத்தீய, விருப்பத்தகாத்தூண்டுதல் தருகிற,மன அமைதி குலைக்கிற, கடுங்குறிப்புக் காட்டுகிற, அஞ்சத்தக்க, அச்சந்தூண்டுகிற, வருவது குறித்து நன்னம்பிக்கை யூட்டாத.
Ugrian, Ugric
உக்ரிய, பின்லாந்து நாட்டு மக்களின வகை சார்ந்த.
Uhlan
n. (வர.) பாய்மா வீரன், விரைந்து செல்லும் ஈட்டி ஏந்திய குதிரை வீரன்.
Uitlander
n. அயலார், தென்னாப்பிரிக்க வழக்கில்வௌதநாட்டவர்.
Ukase
n. மேலிட உத்தரவு, ருசிய வழக்கில் எதேச்சாதிகார ஆணை.
Ukulele
n. ஹவேய் தீவின் வழக்கில் நான்கு நரம்பு யாழ் வகை.
Ulcer
n. சீழ்ப்புண், இழிபண்பு, பேரழிவு பரப்புங்கூறு, ஒழுக்கம் பெரிதுகெடுக்குஞ் செய்தி, (வினை.) சீழ்ப்புண்படுத்து, சீழ்ப்புண்ணாக்கு.
Ulcerable
a. சீழ்ப்புண்ணாகத்தக்க.
Ulcerate
v. சீழ்ப்புண்ணுறுத்து,சீழ்ப்புண்ணாகு, சீழ்வை, சீழ்ப்புண்ணால் பாதிக்கப்பெறு, சீழ்ப்புண்ணாய்மாற்று, சீழ்ப்புண்ணாய் மாறு, அழிவு பரப்பு, கேடுபரப்பு, தீமை பரவப் பெறு.
Ulceration
n. சீழ்ப்புண்ணாதல், இரணமாதல்.
Ulcerative
a. புரைபாடுடைய, சீழ்ப்புண்ணாகத்தக்க.
Ulcered
a. சீழ்வைத்துப் புண்பட்ட, அழிகேடுற்ற.
Ulcerous
a. புரையோடிய, சீழ்ப்புண்ணான.
Ulema
a. உலாமா, இஸ்லாமிய சமயப் பேரறிஞர்.
Uliginose
a. (தாவ.) சேற்றில் வளர்கிற.
Ullage
n. வாணிக அளவுக்குறை, வாணிக வழக்கில் அளவையில் குறைபடுங் கூறு, ஆவிச் சேதாரம், ஆவியாய்ப் போனதனால் ஏற்படும் குறைவிழப்பு, (இழி.) மண்டி, அடிக்கசடு, (வினை.) சேதாரங் கணி, சேதாரப்படுத்து, சேதாரத்துக்குச் சரியீடுசெய்து கொடு.