English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Umman
v. கப்பல் வகையில் ஆட்கள் இல்லாமற் செய், மனித இனப்பண்பு கெடு, ஆண்மை இழக்கச் செய், உறுதி குலை, உரங்கெடு, ஊக்கந் தளர்த்து,சோர்வூட்டு, கோழையாக்கு.
Ummannered
a. பண்புப் பயில்வற்ற, பண்பற்ற.
Umpirage
n. நடுவர் நிலை, நடுவர் செயல், நடுவர் உரிமை.
Umpire
n. நடுவர், காரணிகர், நொதுமலாளர், (வினை.) நடுவராகச் செயலாற்று, ஆட்டத்தில் நடுவராய் இரு.
Umpreship
n. நடுவர் பதவி.
Umpteen
a. (இழி.) ஏதோ சில.
Un (1)
pron (பே-வ) ஒன்று, ஒருவர், யாரோ ஒருவர், ஏதோ ஒரு பொருள்.
Una
n. ஒற்றைப்பாய்ப்படகு வகை.
Unabashed
a. நாணங்கெட்ட, வெட்கமற்ற, துணிந்த, அஞ்சாத.
Unabated
a. குறைக்கப்படாத, தணிக்கப்படாத, குறையாத, தணியாத.
Unabridged
a. சுருக்கப்படாத, முழுமையான.
Unabsolved
a. கழுவாய் செய்யப்படாத, விமோசனஞ் செய்யப்படாத.
Unacademic
a. கல்வி நிறுவனச் சார்பற்ற, கலைத்துறைப் பண்பற்ற.
Unaccented
a. அசையழுத்தம் அற்ற,அழுத்தக்குறி இடப்படாத.
Unacceptable
a. ஏற்கமுடியாத.
Unaccommodating
a. ஒத்திசைவுப் பண்பற்ற, விட்டுக்கொடுக்கும் இயல்பு இல்லாத.
Unaccompanied
a. உடன் அனுப்பப்படாத, உடன் கூட்டில்லாத, இசை வகையில் கருவித்துணையற்ற, பக்கத்துணையற்ற.
Unaccomplished
a. நிறைவேறப்பெறாத.
Unaccountable
a. காரணங் கூறமுடியாத, விளக்கப்பட முடியாப் புதிரான.