English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sacring
n. திருப்பணியமர்த்தீட்டுவினைமுறை, தீக்கை.
Sacring-bell
n. புனிதச் சிறப்பு மணி.
Sacrist
n. திருக்கல நாயகம், மடம்-திருக்கோயில் ஆகியவற்றின் திருக்கலங்களைப் பாதுகாத்து வைக்கும் அலவலர்.
Sacristan
n. ஊர் வட்டாரத் திருக்கோயில் மணியக்காரர்.
Sacristy
n. திருப்பூட்டறை, திருக்கோயில் திருக்கலம் ஆடை அணிமணிகளைப் பாதுகாத்து வைக்கும் அறை.
Sacrosanct
a. திருவார்திருவுடைய, புனிதத்தன்மைசான்ற, மீறொணாத, இறைகாப்புடைய, இடவகையில் மீறாத் திருவாணைக் கட்டுக்காப்புடைய, ஆள்வகையில் புனிதத் தன்மையின் திருக்காப்புடைய, சட்டவகையில் தெய்வீக ஆணையாதரவுடைய.
Sacrum
n. இடுப்படி மூட்டு முக்கோண எலும்பு.
Sad
a. துன்பமிக்க, துயரார்ந்த, கிளர்ச்சியற்ற, சோர்ந்த, வருத்தந்தருகிற, வருந்தத்தக்க, வெறுகத்தக்க, ஔதயற்ற, வண்ண முனைப்பற்ற, கெட்டியான, பண்ணிய வகையில் மாச்செறிவுமிக்க.
Sadden
v. துயரமூட்டு, வருத்தமுண்டாக்கு, துயரப்படு, வருந்து.
Saddle
n. சேணம், கலணைவார், வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி, சேண வடிவான இயந்திர உறுப்பு, இயந்திர உழுபடை இருக்கை, மிதிவண்டி இருக்கை, சேணவடிவுள்ள பொருள், இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு, தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை, இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி, மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம், (வினை.) சேணம்பூட்டு, கலனை அணிவி, பளு ஏற்று, பொறுப்புச் சுமத்து, வேலை சுமத்து, கடமையை மீதேற்று.
Saddle backed
a. கவிவான மேற்புற விளிம்புக் கோடுடைய, மையங்குவிந்து இருசிறைச் சரிவுடைய புறப்பக்கங்கொண்ட.
Saddle- pillar, saddle-pin
n. பொருத்துமுளை, மிதிவண்டி இருக்கைக் குதை குழிவுக்கும் பொருந்தும் முளை.
Saddleback
n. (க.க) எதிரெதிரான இரு முக்கோணச் சுவர் முகடுகளுள்ள கோபுரக்கூரை, சேணவடிவ முப்ட்டினையுடைய குன்று, கவிகைமோடு, கடற்பறவை வகை, மூடாக்குடைய காக்கை வகை, கடற்சிங்க வகை, ஆண், வளர்ப்பின வாத்துவகை, வளர்ப்பினப் பன்றிவகை.
Saddle-blanket
n. சேணக்கம்பளம், சேணத்துணியாகப் பயன்படும் மடித்த சமுக்காளம்.
Saddle-boiler
n. குடுவைக் கொதிகலம், கருவிகலங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் மேற்கவிவான கொதிகலம்.
Saddle-bow
n. சேண வில்வளைவு முற்பகுதி.
Saddle-cloth
n. சேணவிரிப்பு, சேணத்திற்கடியில் குதிரை முதுகின்மீது போடப்படும் துணி.
Saddle-fast
a. சேணத்தில் உறுதியாக அமர்ந்துள்ள.
Saddle-girth
n. குதிரை விலாவார்.
Saddle-horse
n. சவாரிக்குதிரை.