English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Saccharose
n. சர்க்கரை, கரும்புவெல்லம்.
Sacciform
a. பையறை வடிவான.
Saccule
n. சிறு பையறை, சிறு பையுறை போன்ற ஊனீர்சுரக்கும் உடற்பகுதி.
Sacerdocy
n. சமய குருமாராட்சி, புரோகிதத்துவம், புரோகிதவினை, புரோகித நம்பிக்கை, புரோகிதப்பற்று.
Sacerdotage
n. புரோகிதத்துவம், புரோகித ஆட்சி, புரோகித ஆற்றல் மிகுதியான அரசு.
Sacerdotal
a. புரோகிதருக்குரிய, புரோகித இயல்பு வாய்ந்த, சமயகுருமாரின் பண்புடைய, சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற, உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற, புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற.
Sacerdotalism
n. புரோகிதம், புரோகித வினைமுறைமை, புரோகிதத்துவம், புரோகித மனப்பான்மை, புரோகித நலம்பேணும் இயல்பு, புரோகிதர் இயற்கை கடந்த தனி ஆற்றலில் நம்பிக்கை, கடையுணா வழிபாட்டு வேள்வியை முன்னிட்டுக் கிறித்தவ சமயத் தலைவரும் புரோகிதரே என்ற கோட்பாடு.
Sacerdotalist
n. புரோகித ஆட்சி ஆதரவாளர்.
Sacerdotalize
v. புரோகித ஆட்சிக்குரியதாக்கு, புரோகித மயமாக்கு.
Sacerdotally
adv. புரோகித உரிமைமுறைப்படி.
Sack
-1 n. சாக்கு, கோணிப்பை, சாக்குகொள்ளும் அளவு, சாக்கு அளவு எடை, பணிநீக்கம், மாதர் தளதள அங்கி, பட்டுத் தொங்கலாடை, நெகிழ்வு மேற்பார்வைச்சட்டை, (வினை.) கோணிப்பைகுட் புகுந்து, (பே-வ) வேலையை விட்டுத்தள்ளு, (பே-வ) போட்டியில் தோற்கடி, போரில் தோற்கடி.
Sack
-2 n. சூறை, கொள்ளையாட்டு, (வினை.) வென்ற இடத்தைச் சூறையாடு, கொள்ளையிடு, கொள்ளையிடும்படி விடு, கள்வர்வகையில் கிடைத்த உடைமைகளையெல்லாம் கொள்ளையிட்டுக் கொண்டுசெல்.
Sack
-3 n. (வர.) கானரி தீவுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பபெற்ற வெண்ணிற மதுவகை.
Sackage
n. கொள்ளையடிப்பு, சூறையாட்டு.
Sackbut
n. பேரிசைக்கருவி வகை.
Sackcloth
n. முரட்டுச் சணல் துணி.
Sackful
n. கோணிப்பை நிறைவளவு.
Sacking
-2 n. கொள்ளையடிப்பு, சூறையாட்டு.
Sacking (1)
n. முரட்டுச் சணலுடை.
Sackless
a. கள்ளங்கபடற்ற, வௌளையுள்ளம் படைத்த, கேடற்ற, பலக்குறைவு மனம்படைத்த.